பிரபுகூட நடிச்சிருக்கீங்களா? அப்போ வேணாம் - பாலசந்தர் படத்தில் நல்ல ஒரு கேரட்ரை தவறவிட்ட நடிகை
Actor Prabhu: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் சில நடிகர்கள் இருப்பார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் பிரபு. 90களில் பிரபு கொடிகட்டி பறந்தார். ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக கார்த்திக், சத்யராஜ் வரிசையில் பிரபுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபு தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் கெரியரில் சின்னத்தம்பி திரைப்படம் பெரும் மைல் கல்லாக அமைந்தது. […]
Actor Prabhu: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் சில நடிகர்கள் இருப்பார்கள். அவர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் பிரபு. 90களில் பிரபு கொடிகட்டி பறந்தார். ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக கார்த்திக், சத்யராஜ் வரிசையில் பிரபுவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.
சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிரபு தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் , தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவரின் கெரியரில் சின்னத்தம்பி திரைப்படம் பெரும் மைல் கல்லாக அமைந்தது.
இதையும் படிங்க: வீட்டுக்கு வந்த அண்ணாமலை கொடுத்த திடீர் ட்விஸ்ட்… முத்துவையே லாக் செஞ்சிட்டீங்களே..!
அந்தப் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ் நாடு அரசு விருதினை பிரபு பெற்றார். ஆனால் முதலில் சினிமாவில் நடிக்க பிரபு தயக்கம் காட்டியதாகவும் அவரின் சித்தப்பா சண்முகத்தின் தூண்டுதலின் பெயரில் பல படங்களில் பிரபுவை தேடி வாய்ப்பு வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகை சத்யப்ரியா ஒரு பேட்டியில் பிரபுவுடன் நடித்ததனால் இதில் நடிக்க கூடாது என பாலசந்தர் சொன்னதாக ஒரு சம்பவத்தை கூறினார். கே.பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த், மீனாட்சி சேஷாத்திரி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் டூயட்.
இதையும் படிங்க: நாட்டாமை படத்துல பொன்னம்பலம் வாங்கி சம்பளம் இவ்வளவுதானா!.. என்னமோ நினைச்சா!.. அடப்பாவமே!..
இந்தப் படத்தில் நடிகை சத்யப்ரியா சரத்பாபுவுக்கு மனைவியாக நடித்திருப்பார். அந்தப் படத்தில் மிகவும் முக்கிய கேரக்டராக இருந்தது சித்தி கேரக்டராம். அந்த சித்தி கேரக்டருக்கு முதலில் நடிக்க இருந்தது சத்யப்ரியாதானாம்.
ஆனால் பாலசந்தர் சத்யப்ரியாவிடம் ‘ நீ சமீபத்தில் பிரபு படத்தில் அவருடன் எதுவும் நடிச்சிருந்தீயா’ என கேட்டாராம். அதற்கு சத்யப்ரியா ஒருவேளை பிரபுவுடன் நடித்தால்தான் வாய்ப்பு கொடுப்பார் போல என்று நினைத்துக் கொண்டு ‘ ஆமாம்’ எனக் கூறி பல படங்களின் பெயர்களை லிஸ்ட் போட்டு பட்டியலிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மாலினியின் தில்லாலங்கடியால் குழம்பிய பாக்கியா… அடுத்த கோபியாக மாறிய செழியன்..!
இதை கேட்ட பாலசந்தர் அப்போ இந்த கேரக்டர் உனக்கு வேண்டாம் என கூறிவிட்டு அதே படத்தில் சரத்தின் மனைவி கதாபாத்திரத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ஏனெனில் இதற்கு முந்தைய படங்களிலும் பிரவுடன் ஒரே மாதிரியான கதாபாத்திரத்திரம் என்பதால் இந்த படத்திலும் வேண்டாம் என்ற காரணத்திற்காக பாலசந்தர் வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.