உங்களுக்கு அவரு தான முக்கியம்..! எஸ்.பி.முத்துராமனிடம் முரண்டு பிடித்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்..!

by Akhilan |
உங்களுக்கு அவரு தான முக்கியம்..! எஸ்.பி.முத்துராமனிடம் முரண்டு பிடித்த கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்..!
X

Rajinikanth vs Kamalhassan: தமிழ் சினிமாவில் இரண்டு தூண்களாக இருந்தது கமலும், ரஜினிகாந்தும் தான். அவர்களுக்கு ரொம்பவே பிடித்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் இருவரும் ஒருமுறை சண்டைக்கே நின்ற சம்பவமும் கூட நடந்து இருக்கிறதாம்.

எஸ்.பி.முத்துராமன் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர். இப்போ இருக்கும் இயக்குனர்களால் செய்ய முடியாத ஒரு விஷயத்தினை செய்து அசத்தியவர். ஆம், அவர் ஒரே நேரத்தில் கோலிவுட்டின் இரண்டு தூண்களாக இருந்த கமல் மற்றும் ரஜினியை இயக்கினார்.

இதையும் படிங்க: உலகநாயகனுக்கே இப்படி ஒரு குழப்பமா.. வேற ஒருவரை இளையராஜா என நினைத்த கமல்ஹாசன்..!

அதற்கு ஒரு ட்ரிக்கை ஃபாலோ செய்து கொண்டு இருந்தாராம். முதலில் தன்னுடைய டீமுடன் அமர்ந்து கதையை தேர்வு செய்து விடுவார். இதையடுத்து முதல் 10 நாட்கள் ரஜினியுடன் ஷூட்டிங் போவாராம். அடுத்த 10 நாட்களை கமலிடமும் கால்ஷீட்டாக வாங்கிக் கொள்வாராம்.

இப்படி மாதத்தில் 10 நாட்களாக மாத்தி மாத்தி ஷூட்டிங் போனதால் அவரே பல நேரத்தில் இருவரின் பெயரை குழப்பி விடுவாராம். கமல் படப்பிடிப்பு முடிந்து ரஜினி படத்தின் ஷூட்டிங் வேலைகள் தொடங்கி இருக்கும். அப்போது ஒரு காட்சியை முத்துராமன் விளக்கும் போது, இப்படி பண்ணு கமல் என்று கூறிவிடுவாராம்.

இதையும் படிங்க: தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்!.. அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!..

இதை கேட்ட ரஜினி சிரித்துக்கொண்டே, என்னதான் இருந்தாலும் உங்கக் குழந்தையைத் தானே நல்லா ஞாபகம் வெச்சிருக்கீங்க என கிண்டல் செய்து முறைத்து கொள்வாராம். இதே போல கமல் ஷூட்டிங் போய் அங்கு காட்சி விளக்கும் போது ரஜினி பெயரை மாற்றி சொல்வாராம்.

அதை கேட்டும் கமலும், பார்த்தீங்களா. வளர்த்த பிள்ளையை மறந்துட்டீங்க. வந்த பிள்ளையை தான் ஞாபகம் வெச்சிருக்கீங்க! எனச் செல்லமாக கோபித்து கொள்வாராம். அட இல்லைங்கப்பா ஷூட்டிங்கில் மாறி மாறி இருப்பதால் வரும் குழப்பம் எனச் சொல்லி இருவரை சமாதானப்படுத்தி நடிக்க வைப்பாராம்.

Next Story