அடுத்த ஆண்டு ஆண்டவர் ஆண்டு தான் போல.. இந்தியன் 2, இந்தியன் 3 எப்போ ரிலீஸ் தெரியுமா?

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் 6 மணி நேரத்துக்கு மேலாக ஒட்டுமொத்த ஃபுட்டேஜ் உள்ள நிலையில், அதனை அப்படியே 2 பாகங்களாக ஷங்கர் மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் மற்றும் இந்தியன் 3 திரைப்படம் என இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு வெளியாகப் போவதாக அதிரடி தகவல்கள் ரிலீஸ் தேதி எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது. இதையும் படிங்க: கம்பேக் இந்தியன்!.. ஷங்கர் இயக்கத்தில் கமல் மிரட்டும் இந்தியன் […]

By :  Saranya M
Update: 2023-11-03 09:10 GMT

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படம் 6 மணி நேரத்துக்கு மேலாக ஒட்டுமொத்த ஃபுட்டேஜ் உள்ள நிலையில், அதனை அப்படியே 2 பாகங்களாக ஷங்கர் மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் மற்றும் இந்தியன் 3 திரைப்படம் என இரண்டு படங்களுமே அடுத்த ஆண்டு வெளியாகப் போவதாக அதிரடி தகவல்கள் ரிலீஸ் தேதி எதிர்பார்ப்புடன் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: கம்பேக் இந்தியன்!.. ஷங்கர் இயக்கத்தில் கமல் மிரட்டும் இந்தியன் 2 இன்ட்ரோ எப்படி இருக்கு?.. தேறுமா?..

மேலும், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இன்னும் 2 படங்கள் என மொத்தமாக 4 படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சூர்யாவின் கங்குவா படம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு வேட்டு வைக்கும் விதமாக இந்தியன் 2 படம் வெளியாக போகிறது.

மேலும், அடுத்த ஆண்டு தீபாவளிக்கே இந்தியன் 3 படத்தையும் ரிலீஸ் செய்து ஒட்டுமொத்த வசூல் வேட்டையை கமல்ஹாசனும் லைகாவும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: விபத்தில் சிக்கி 23 அறுவை சிகிச்சைகள்!.. 3 வருடம் படுக்கை!.. சாதித்து காட்டிய சியான் விக்ரம்!..

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ள திரைப்படம் அடுத்த ஆண்டு ஆயுத பூஜைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கல்கி திரைப்படமும் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

லால் சலாம், தலைவர் 170, தளபதி 168, விடாமுயற்சி, கங்குவா, தங்கலான் உள்ளிட்ட பல பெரிய படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகும் நிலையில், அனைவரையும் ஓவர்டேக் செய்து விடுவார் ஆண்டவர் என்றே தெரிகிறது. இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் போட்டி இன்னும் மோசமாக இருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News