கமல் இப்படி ஒரு காரியத்தை செய்வாருனு நினைக்கல! அடிமையா போனதுதான் மிச்சம்.. ஆதங்கத்தில் இயக்குனர்
Actor Kamal: கமல் இப்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அதுவும் ஆளும் கட்சியுடன் கூட்டணி என அறிவித்ததுமே அவரை பற்றி பல ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவர் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் எல்லாம் முடிந்த பிறகே தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி கமல் பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். கமல் கெரியரிலேயே […]
Actor Kamal: கமல் இப்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அதுவும் ஆளும் கட்சியுடன் கூட்டணி என அறிவித்ததுமே அவரை பற்றி பல ட்ரோல்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவர் நடித்து வரும் தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் எல்லாம் முடிந்த பிறகே தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாக உள்ளது.
இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி கமல் பற்றி சில விஷயங்களை கூறியிருக்கிறார். கமல் கெரியரிலேயே அதிக வரவேற்பையும் வசூலையும் பெற்ற படமாக ‘விக்ரம்’ திரைப்படம் அமைந்தது. ஆனால் இந்த வெற்றி கமல் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றும் பிரவீன் காந்தி கூறினார்.
இதையும் படிங்க: சரோஜா தேவியா?.. ஜெயலலிதாவா?!.. எம்.ஜி.ஆர் பட வாய்ப்பு தட்டி தூக்கியது யார் தெரியுமா?!..
ஆனால் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்தது கமலோ அல்லது லோகேஷ் கனகராஜோ இல்லை என்றும் முழு காரணமே உதய நிதி என்று கூறினார். ஏனெனில் உதயநிதி மட்டும் இல்லை என்றால் அத்தனை திரையரங்குகளும் விக்ரம் படத்திற்கு கிடையாது என்றும் மற்ற படங்கள் எதையும் அவர் அந்த நேரத்தில் ரிலீஸாக விடாமல் தடுத்தார் என்றும் பிரவீன் காந்தி கூறினார்.
இப்படி செய்தால்தான் கமலை அவர் பக்கம் இழுக்க முடியும். கமலை தன் அடிமையாக்க முடியும் என்ற காரணத்தினால்தான் உதய நிதி எந்த படங்களையும் உள்ளே விடாமல் விக்ரம் படத்தை அனைத்து திரையரங்குகளிலும் ஓட செய்தார். அவர் நினைத்ததை போல் கமல் இப்பொழுது யார் பக்கம் நிற்கிறார் என அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதையும் படிங்க: விரைவில் படம் ரிலீஸ்!.. வீட்டில் நடந்த துக்கம்!.. ரஜினி பட இயக்குனருக்கு நேர்ந்த சோகம்!..
ஆனால் கமல் இப்படி செய்வார் என யாரும் எதிர்பார்க்க வில்லை. நன்கு இலக்கிய ஞானம் பெற்றவர், உலக அறிவு பெற்றவர். அதனால் அவருடைய அரசியல் பார்வை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடைசியாக உதய நிதி நினைத்ததை போல ஒரு அருவருடியாகவே மாறிப்போனார் கமல் என பிரவீன் காந்தி ஒரு பேட்டியில் கூறினார்.