வடிவேலு - கோவை சரளா ஜோடியை பிரிக்க நினைத்த கவுண்டமணி... அப்புறம் நடந்ததுதான் ஹைலைட்..

by sankaran v |   ( Updated:2024-05-14 11:31:34  )
VGKS
X

VGKS

வைகைப்புயல் வடிவேலு தனது சினிமாவில் நடித்தது எப்படி? கோவை சரளா அவருக்கு ஜோடியானது எப்படி என்று பிரபல இயக்குனர் வி.சேகர் தெரிவித்துள்ளார். என்னவென்று பார்ப்போமா...

வடிவேலுவுக்கு எல்லா திறமையும் இருக்கு. நல்லா பாடுறான். ஒல்லியா இருக்கான். யூத்தா இருக்கான். இவனை நல்லா பயன்படுத்திக்கலாம்னு நினைச்சேன். ஆனா இவனுக்கு ஜோடி போட்டா நல்லாருக்கும்னு நினைச்சி கோவை சரளாவை ஜோடியா போட்டேன். முதலில் இதற்கு கோவை சரளா சம்மதிக்கவில்லையாம். செந்தில், கவுண்டமணி எல்லாம் அவரைப் பயமுறுத்தினார்களாம். அவன்கூட எல்லாம் ஜோடியா நடிச்சேன்னா அவ்வளவு தான்னு சொன்னாங்களாம்.

இதையும் படிங்க... கூலி படத்திலும் இது இல்லையா? அப்போ லோகேஷ் மறுபடியும் பார்முக்கு திரும்பிட்டாரோ…

வடிவேலு ஜோடியாக கோவை சரளா நடிச்சாங்க. அதுக்கு வரவு எட்டணா செலவு பத்தணா படத்துல நடிக்கும்போது கொஞ்சம் எதிர்ப்பு வந்தது. படம் செம மாஸானது. கவுண்டமணி, செந்தில் ஜோடிக்கு கரகாட்டக்காரன் படத்தில் இருந்தே பிரமாதமா ஒர்க் அவுட்டானது. வடிவேலுவுக்கு கோவை சரளாவை அடுத்த படமான காலம் மாறிப்போச்சு போடும்போது செந்திலுக்கு கவுண்டமணி மகனா வடிவேலு நடிச்சான்னா நமக்கு சிக்கலாயிடுமோன்னு சந்தேகம் வந்ததாம்.

ஏன்னா தொடர்ந்து கவுண்டமணிக்கு ஜோடியா செந்தில் தானே நடித்து வந்தார். அதனால் தான் அவருக்கு இந்த சந்தேகம் வந்து விட்டது. இந்த விஷயம் கவுண்டமணிக்குத் தெரிய, எங்கிட்ட வந்து சொன்னாரு. ஒண்ணு அவன் நடிக்கட்டும். என்னை விட்டுருங்கன்னு சொல்லிட்டாராம். இதை முன்னாடியே சொல்லியிருந்தா பரவாயில்ல. கதை எல்லாம் கேட்கற வரைக்கும் விட்டுட்டீங்க. இப்ப மறுபடியும் அவனைப் போக சொல்ல முடியாது. முதல்லயே சொல்லி இருந்தா அவனை விட்டுருக்கலாம்னு சொன்னேன். அதனால கவுண்டமணி படத்தில் இருந்து விலகிட்டாரு.

இதையும் படிங்க... ரசிகர்களை கலங்க வைத்த 5 தென்னிந்திய ஸ்டார்களின் டைவர்ஸ்… இவங்க சொன்னது தான் இன்னமும் மறக்க முடியலையே?

காலம் மாறிப்போச்சு படத்தில் கவுண்டமணியின் மகனாக வரும் வடிவேலு ஒரு பொண்ணைக் காதலிக்கிறாராம். அவருக்கு சூப்பர் கேரக்டராம். அதனால் தான் செந்தில் கவுண்டமணி வடிவேலு ஜோடி ஒர்க் அவுட்டாச்சுன்னா நமக்கு பேர் போயிடும்னு நினைச்சாராம். அதே நேரம் நான் பெத்த மகனே படத்தின் போது வடிவேலு கார் வாங்கிட்டாரு. அதன்பிறகு அவர் கொஞ்சம் கெத்தைக் காட்டினாராம். கவுண்டமணி, செந்தில் தான் சூட்டிங் ஸ்பாட்ல தனியா பேசுவாங்களாம். வடிவேலு அவங்க கூட சேர மாட்டாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வி.சேகர் இயக்கிய பல படங்களில் வடிவேலு, கோவை சரளா ஜோடி நடித்துள்ளார்கள். காலம் மாறிப் போச்சு, பொங்கலோ பொங்கல், விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, நம்ம வீட்டு கல்யாணம் உள்பட பல படங்களில் நடித்துள்ளனர்.

Next Story