எட்டே படம்… கோடீஸ்வர அப்பா.. வெளியில் தெரியாத குடும்ப விவரம்… காணாமல் போன ஹீரோ..! ஆச்சரிய தகவல்..!
Kollywood Actor: தமிழ் சினிமா வாய்ப்பு சிலருக்கு தான் பெரிதாக கை கொடுக்கும். சிலர் என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் சரியாகவே அமையாது. ஒரு சிலருக்கு நன்றாக அமைந்தால் கூட அது தங்காது. அப்படி ஒரு ஹீரோ தான் ஜீவன். இவரை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை கேட்டாலே ஆச்சரியப்படும் ரகம் தான்.
’யுனிவர்சிட்டி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் ஜீவன். அந்த படம் பெரிய ரீச் இல்லை என்றாலும் சரியான எண்ட்ரி படமாக அமைந்தது. அதை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் வில்லனாக எண்ட்ரி கொடுத்து மிரட்டினார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கூட நடிச்சாலும் சிவாஜியை பாராட்டிய ஜெயலலிதா!.. அதுவும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!…
வில்லன் என்றாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தினை உருவாக்கியது. அந்த படத்திற்காக அவருக்கு பிலிம்பேர் விருது கூட கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து திருட்டுப் பயலே படத்தில் ஹீரோவாக நடித்தார்.
படம் மாஸ் ஹிட் எனச் சொல்லும் அளவுக்கு அமைந்தது. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் அமைந்தது. அதில், நான் அவன் இல்லை, மச்சக்காரன், தோட்டா நான் அவன் இல்லை 2, அதிபர், பாம்பாட்டம் ஆகிய படங்களில் நடித்தார். இவரின் எந்த படமும் ப்ளாப் லிஸ்டிலே இல்லை.
சுமார் வசூல் அல்லது சூப்பர் ஹிட் வெற்றியை பெற்று விடும். கேரியர் உட்சத்தில் இருக்கும் போதே ஜீவன் திடீரென எதனால் காணாமல் போனார். இவர் தந்தை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தொழிலதிபர். தந்தை தயாரிக்கிறேன் எனச் சொன்ன போதே நோ சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் புகை, மது அருந்தாமல் இருந்ததற்கு காரணமான சம்பவம்!. இவ்வளவு நடந்திருக்கா!...
இதுவரை அவர் எந்த இயக்குனரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதே இல்லையாம். அவருக்கு வந்த வாய்ப்புகள் அனைத்துமே தேடி வந்தது தான். இதில் அவர் நடிப்பில் உருவான கிருஷ்ண லீலா இன்னமும் ரிலீசாகாமல் முடங்கி இருக்கிறது.
தான் கொடுத்த கால்ஷூட்டில் குழப்பமே கொடுத்தது இல்லையாம். ஒரே நேரத்தில் 8 நடிகைகளுடன் நடித்தும் எந்த பிரச்னையும் கொடுக்காமல் இருந்தவராம். நடிப்புக்காக லண்டன் வரை சென்று படித்து வந்தவர் ஏன் அதை தொடரவில்லை என்பதே ஆச்சரியமான விஷயம் தான்.
இதுமட்டுமில்லை, ஜீவனுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? குழந்தை இருக்கா? அந்த தொழிலதிபர் தந்தை யார் என்ற எந்த தகவலையும் மீடியாவில் கசியவிடாமலே பார்த்து கொள்கிறார். கேள்வி எழுந்த போது கூட அதற்கு பதிலளிக்க மறுத்துவிடுவார் என்பது சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.