கணவரை இழந்த பெண்ணுக்கு கேபிஒய் பாலா செய்த உதவி!.. அடேங்கப்பா அந்த ஹீரோவும் கூட்டு சேர்ந்துட்டாரே!..
கலியுக கர்ணனாகவே கேபிஒய் பாலா மாறிவிட வேண்டும் என நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை தொடர்ந்து தன்னால் முயன்ற உதவிகளை செய்து கொண்டே வருகிறார். கணவரை இழந்த பெண் ஒருவருக்கு உதவி செய்துள்ள பாலா அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆம்புலன்ஸ் இல்லாத ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்க ஆரம்பித்த பாலா இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்கள் வாங்கி கொடுத்துள்ளார். மொத்தம் 10 ஆம்புலன்ஸ் வாங்கி தருவேன் என்றும் கூறியுள்ளார். இதையும் படிங்க: ஆடு ஜீவிதம் […]
கலியுக கர்ணனாகவே கேபிஒய் பாலா மாறிவிட வேண்டும் என நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை தொடர்ந்து தன்னால் முயன்ற உதவிகளை செய்து கொண்டே வருகிறார். கணவரை இழந்த பெண் ஒருவருக்கு உதவி செய்துள்ள பாலா அந்த வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் இல்லாத ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுக்க ஆரம்பித்த பாலா இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்கள் வாங்கி கொடுத்துள்ளார். மொத்தம் 10 ஆம்புலன்ஸ் வாங்கி தருவேன் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஆடு ஜீவிதம் படத்தின் ரியல் கலெக்ஷன் இதுதான்!.. பிரித்விராஜ் வெளியிட்ட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!..
அதனை தொடர்ந்து மிக்ஜாம் புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னிடம் இருந்த காசு எடுத்து கொடுத்து நிவாரண உதவிகளை செய்து வந்தார். மேலும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனமும், பெட்ரோல் பங்கில் வேலைப்பார்த்து வந்த இளைஞர் ஒருவருக்கு புதிதாக பைக் ஒன்றும் வாங்கி கொடுத்திருந்தார்.
சமீபத்தில், பள்ளிக்கூடம் ஒன்றில் சரியான கழிப்பறை இல்லாததை அறிந்து மாணவர்கள் கொடுத்த மனுவை ஏற்று அந்த பள்ளிக்கு கழிப்பறையை ஏற்படுத்தி கொடுக்க, பாலா 15 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்பதை அறிந்து கொண்ட நிலையில், ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து அந்த பள்ளிக்கு கழிப்பறையை கட்டி கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: நடிகர்களின் 25வது திரைப்படங்கள்.. யாருக்கு வெற்றி?.. யாருக்கு தோல்வி?.. வாங்க பார்ப்போம்!..
இந்நிலையில், தற்போது கணவரை இழந்த முருகம்மாள் என்பவர் சொந்தமாக ஆட்டு வாங்க வேண்டும் என்கிற கனவுடன் இருந்து வந்த நிலையில், அவருக்கு ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. இதிலும், ராகவா லாரன்ஸ் தனது பங்கை செலுத்தி உள்ளார். இனிமேல் பாலா மற்றும் ராகவா லாரன்ஸ் சேர்ந்து இதுபோன்ற உதவிகளை செய்வார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்து வரும் பாலா நலமுடன் இருக்க வேண்டும் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..