5 வருஷம் கிடப்பில் இருந்ததுக்கு விடிவுகாலம் வந்துருச்சு... பிரசாந்தின் 'அந்தகன்' பட டிரைலர் ரிலீஸ்...!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வளர்ந்தவர் பிரசாந்த். நடிகரும் பிரபல இயக்குனரான தியாகராஜன் அவர்களின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய சிறந்த நடிப்பு, டான்ஸ், ஆக்சன், ஜிம்னாஸ்டிக் என பல வித்தைகளை கற்று தேர்ந்தவர். விஜய் அஜித்துக்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய நடிகர்களில் பிரசாந்தும் ஒருவர். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரின் எந்த திரைப்படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. பல வருடத்திற்கு பிறகு நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் […]

Update: 2024-07-17 10:03 GMT

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வளர்ந்தவர் பிரசாந்த். நடிகரும் பிரபல இயக்குனரான தியாகராஜன் அவர்களின் மகனாக சினிமாவில் அறிமுகமானாலும் தன்னுடைய சிறந்த நடிப்பு, டான்ஸ், ஆக்சன், ஜிம்னாஸ்டிக் என பல வித்தைகளை கற்று தேர்ந்தவர்.

விஜய் அஜித்துக்கு முன்பாகவே தமிழ் சினிமாவில் மாஸ் காட்டிய நடிகர்களில் பிரசாந்தும் ஒருவர். ஆனால் கடந்த சில வருடங்களாக அவரின் எந்த திரைப்படங்களும் அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்கவில்லை. பல வருடத்திற்கு பிறகு நடிகர் விஜயின் கோட் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.

அப்படத்தில் இருந்து வெளியான முதல் பாடலில் விஜய்க்கு சரிசமமாக அவர் நடனமாடி இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் தான் அந்தகன். இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 5 வருடங்களாக கிடப்பில் கிடந்தது. தற்போது அதற்கு விடிவுகாலம் வந்துவிட்டது.

இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்திருக்கின்றார். மேலும் சிம்ரன், சமுத்திரகனி, கார்த்திக், ஊர்வசி, யோகி பாபு, வனிதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கின்றது. கிரைம் திரில்லர் பாணியில் இருக்கும் இப்படத்தில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் காணப்படுகின்றார்.

சிம்ரனின் கதாபாத்திரம் சஸ்பென்ஸாக இருக்கின்றது. பல தடங்கல்களுக்கு பிறகு வெளிவரும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படம் கட்டாயம் நடிகர் பிரசாந்துக்கு ஒரு கம்பேக்காக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள். இருப்பினும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரைலர் இதோ..

Full View

Tags:    

Similar News