ரசிகர்களை கதறவிட்ட தாத்தா!.. இந்தியன் 2வை இந்த பொள பொளக்குறாங்களே!.. ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்தியன் 2 படத்திற்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற கதையாக மாறிவிட்டது என அதிகாலை காட்சியையே அடித்து பிடித்துக் கொண்டு பார்த்த அமெரிக்க ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். 2.0 படத்திலேயே ஷங்கர் அவுட் டேட்டட் ஆகி விட்டார் என்கிற கடுமையான விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், கருத்து சொல்லி கழுத்தை அறுத்து விட்டார் என இந்தியன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் […]

By :  Saranya M
Update: 2024-07-17 10:03 GMT

இந்தியன் 2 படத்திற்கு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற கதையாக மாறிவிட்டது என அதிகாலை காட்சியையே அடித்து பிடித்துக் கொண்டு பார்த்த அமெரிக்க ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர். 2.0 படத்திலேயே ஷங்கர் அவுட் டேட்டட் ஆகி விட்டார் என்கிற கடுமையான விமர்சனங்கள் கிளம்பிய நிலையில், கருத்து சொல்லி கழுத்தை அறுத்து விட்டார் என இந்தியன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, விவேக், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மானுக்கு பதில் அனிருத் இசையமைத்துள்ளார். ஆனால், முக்கியமான இடங்களில் ஏ.ஆர். ரஹ்மான் இந்தியன் படத்திற்கு அமைத்த இசையை பயன்படுத்தி உள்ளார் ஷங்கர்.

இந்தியன் தாத்தா அறிமுகமே ரசிகர்களுக்கு படம் சொதப்ப போகிறது என முதல் பாதி டல்லாக வெறும் பில்டப்புடன் மட்டுமே செல்ல கடுப்பாகி விட்டனர். அடுத்து, படத்தின் பின்னணி இசை, பாடல்கள் என எதுவுமே இந்தியன் படத்துடன் மேட்ச் செய்ய முடியாத நிலையில், முதல் பாதியின் இடைவேளைக்கு முன்பு தான் படம் சற்று சூடு பிடித்தது என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், நம்ப முடியாத காட்சிகளாகத்தான் திரையில் 2ம் பாகத்தில் வரும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன என்றும் அதைவிட படத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துவது அதன் மோசமான வசனங்கள் தான் என்றும் சுஜாதா இல்லாமல் ஷங்கர் படங்கள் எல்லாம் சுத்தமாக ரசிக்கவே இல்லை என்பது இந்த படத்திற்கு 3 பேர் வசனம் எழுதியும் பயனளிக்காமல் போனதில் இருந்து தெரிகிறது என்கின்றனர்.

சித்தார்த் வரும் காட்சிகளும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றும் படத்தின் கிளைமேக்ஸ் மற்றும் இந்தியன் 3 டிரைலர் தான் ஆறுதல், அதிலும் சேனாபதியின் அப்பா கமல்ஹாசனின் லுக் அப்படியே உத்தம வில்லன் பீரியட் போர்ஷனில் கமலை காட்டும் லுக் போலவே இருக்கிறது என கலாய்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News