மோகன் வந்ததும் தப்பிச்சி ஓடி வந்துட்டேன்!.. கவனமா இருங்க!. நடிகரிடம் சொன்ன கமல்ஹாசன்!..

அறிமுகம் என்பது ரஜினியை போல மைக் மோகனுக்கும் முதல் படம் கமலுடன் அமைந்ததது. பாலுமகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா படத்தில் மோகனுக்கு அவரின் நண்பர் வேடம். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நாடகங்களில் நடித்து வந்தார் மோகன். பாலுமகேந்திரா கண்ணில் பட்டு நடிகராக மாறினார். பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படத்திலும் மோகன் நடித்திருப்பார். மூன்றாவதாக மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்தார். அதன்பின் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை படம் சூப்பர் ஹிட் […]

Update: 2024-07-17 10:04 GMT

அறிமுகம் என்பது ரஜினியை போல மைக் மோகனுக்கும் முதல் படம் கமலுடன் அமைந்ததது. பாலுமகேந்திரா கன்னடத்தில் இயக்கிய கோகிலா படத்தில் மோகனுக்கு அவரின் நண்பர் வேடம். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நாடகங்களில் நடித்து வந்தார் மோகன். பாலுமகேந்திரா கண்ணில் பட்டு நடிகராக மாறினார்.

பாலுமகேந்திரா இயக்கிய மூடுபனி படத்திலும் மோகன் நடித்திருப்பார். மூன்றாவதாக மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நடித்தார். அதன்பின் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் மோகன் நடித்த பயணங்கள் முடிவதில்லை படம் சூப்பர் ஹிட் அடிக்க மோகன் மார்க்கெட் மேலே போனது.

கோகிலா படத்தில் மோகன் அறிமுகமான போது கமல் பிரபலமான நடிகராக இருந்தார். கால்ஷீட்டை எப்படி பராமரிக்க வேண்டும் என் மோகனுக்கு சொல்லி கொடுத்தவரும் கமல்தான். இதை மோகனே பேட்டி ஒன்றில் சொல்லி இருக்கிறார். ஒருகட்டத்தில் மோகன் வளர்ந்து கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தார்.

கமல் படங்களை விட மோகனின் சில படங்கள் அதிக நாட்கள் ஓடியதும் நடந்தது. இந்நிலையில், நடிகர் காதல் சுகுமார் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘விருமாண்டி’ படத்தில் கமல் சாருடன் நடித்தபோது ‘நாளைக்கு ஜிம்னாஸ்டிக் தெரிந்த 3 பேர் வேணும்’ என கமல் சார் கேட்டார். உடனே நான் ‘எனக்கு தெரியும் சார்’ என சொல்லி பின்னால் டைவ் அடித்து காட்டினேன்.

‘நல்லா இருக்கு. ஆனா நீங்க அதுல நடிக்க முடியாது. இந்த பாட்டில் நீங்கள் இல்லை’ என சொல்ல நான் அழுவது போல ஆகிவிட்டேன். உடனே ‘உங்களுக்கு வேறு நல்ல சீன்ஸ் இருக்கு.. கவலைப்படாதீங்க’ என சொல்லி என் தோள் மீது கைப்போட்டு தனியே கூட்டி சென்றார். அப்போது ‘என்னிடம் சொன்ன மாதிரி எல்லோரிடமும் போய் எனக்கு ஜிம்னாஸ்டிக் தெரியும் என சொல்லாதீர்கள்’ என சொன்னார்.

‘ஏன் சார்?’ எனக்கேட்டேன். ‘எல்லா படத்திலும் உங்களை செய்ய சொல்வார்கள். நான் சில படங்களில் மைக்கை பிடித்துக்கொண்டு நடனமாடிக்கொண்டே பாட்டு பாடுவது போல நடித்தேன். அந்த படங்கள் வெற்றி பெற்றதால் தொடர்ந்து என் படம் என்றாலே மைக் பாட்டை ஒன்றை வைத்துவிடுவார்கள். மோகன் வந்த பின் அவர் அதை செய்ய துவங்க மைக்கை அவரிடம் கொடுத்துவிட்டு தப்பி ஓடிவந்துவிட்டேன்’ என சொன்னார்’ என சுகுமார் கூறியிருந்தார்.

Tags:    

Similar News