விஜய், ரஜினி பட டான்ஸ் மாஸ்டர் செய்த வேலை..! மனுஷன் ஆம்பளைய கூட விட்டு வைக்கலயே!

மலையாளத்துல ஆரம்பிச்ச தீ ஒவ்வொரு இடமாகப் பற்றிக்கொண்டு வருகிறது...!

By :  sankaran
Update: 2024-09-20 09:00 GMT

மலையாளத்துல ஹேமா கமிட்டியோட சூடு இன்னும் தணியல. அது இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. அதில் இருந்து சில பக்கங்கள் லீக்கானதற்கே இந்திய சினிமா உலகே மலையாள சினிமாவைத் திரும்பிப் பார்த்தது. ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஹேமாவைக் கொண்டு ஒரு அறிக்கையை அந்த அரசே உருவாக்கியது. அதே போல எல்லா இடங்களிலும் கொண்டு வரலாமே. இப்போது விஷயத்துக்கு வருவோம்.

தெலுங்கு சினிமா உலகமே பற்றிக்கொண்டு எரிகிறது. அங்கும் விசாரணை கமிஷன் ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் பலமாக வேணும்னு ஒரு குரல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. என்னன்னா ரஞ்சிதமே ரஞ்சிதமே டான்ஸ் மாஸ்டர் ஜானி. அலமி பித்தா, காவாலா, மேகம் கருக்குமே பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டர். திருச்சிற்றம்பலத்துல தேசிய விருது வாங்கிய டான்ஸ் மாஸ்டர். அவரோட பக்கத்தை எடுத்தா மிகக்கேவலமா இருக்கு.

21 வயது பெண்ணை சில ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தால் எவ்வளவு பெரிய கேவலமானவர். இதற்கு அவரது மனைவியும் உடந்தை. நெல்லூரைச் சேர்ந்தவர் தான். சாதாரண குரூப் டான்சர். அப்புறம் டான்ஸ் மாஸ்டர் ஆகிறார்.


அளவைகுந்தபுரம் படத்தில் வரும் பாடல் தான் இவரை பெரிய அளவில் கொண்டு வந்தது. அந்தப் படத்தில் வந்த 16 வயது பெண் தான் இவருக்கு நடன உதவியாளர் ஆனார். அவர் மராட்டியத்தைச் சேர்ந்தவர். அந்தப் படத்தில் இருந்து இவருக்கு இந்தத் துன்புறுத்தல் செஞ்சிக்கிட்டே இருக்கார் இந்த சைக்கோ.

நடன இயக்குனர் ஜானிக்கு ஏன் இந்த கண்ணியம் இல்லாமல் போனது. பவன் கல்யாண் டச்ல இருக்கேன், ஜனசேனால இருக்கேன்னு ஜானி தன்னோட கெத்தைக் காட்ட அதற்குப் பயந்து அந்தப் பெண்ணும் பயந்து கொண்டே இருந்தாராம்.

கேரளாவில் துணிச்சலாக ஒன்று சேர்ந்து கொண்டு வந்த கமிட்டியைத் தமிழ்சினிமாவுல வைக்க முடியுமா? ஜானி மாஸ்டர்கிட்டயே சதீஷ் என்ற ஒரு இளைஞர் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தினார்னு சொல்லி இருக்கிறார். அவரும் ஒரு அசிஸ்டண்ட். அப்படின்னா இந்த ஆளு ஆம்பளையும் விட்டுவைக்கல போல. மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News