சின்ன வயசிலேயே கெட்ட வார்த்தையில் கவிதை எழுதிய கமல்... அப்பாவின் ரியாக்ஷன் தான் ஹைலைட்!
இந்தியன் 2 படத்துக்கான பிரஸ் மீட் நேற்று நடந்தது. இதில் பல சுவாரசியமான கேள்விகளைப் பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். அப்படி ஒரு கேள்வியை இயக்குனர் ஷங்கரிடம் வைத்தனர். பொதுவாக அரசியல் சம்பந்தமான படங்கள் என்றாலே வசனத்திற்கு சென்சார் வைப்பாங்க. இந்தியன் 2 படத்துக்கு எத்தனை இடங்களில் சென்சார் பண்ணினாங்கன்னு கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த ஷங்கர், டயலாக் கட்ஸ் வந்துருக்கு. கெட்ட வார்த்தைகளை எல்லாம் நீக்கச் சொன்னாங்க. சில கிளாமரா இருக்குறதை எல்லாம் நீக்கச் சொன்னாங்க. அப்போது குறுக்கிட்ட […]
இந்தியன் 2 படத்துக்கான பிரஸ் மீட் நேற்று நடந்தது. இதில் பல சுவாரசியமான கேள்விகளைப் பத்திரிகையாளர்கள் முன்வைத்தனர். அப்படி ஒரு கேள்வியை இயக்குனர் ஷங்கரிடம் வைத்தனர். பொதுவாக அரசியல் சம்பந்தமான படங்கள் என்றாலே வசனத்திற்கு சென்சார் வைப்பாங்க. இந்தியன் 2 படத்துக்கு எத்தனை இடங்களில் சென்சார் பண்ணினாங்கன்னு கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த ஷங்கர், டயலாக் கட்ஸ் வந்துருக்கு. கெட்ட வார்த்தைகளை எல்லாம் நீக்கச் சொன்னாங்க. சில கிளாமரா இருக்குறதை எல்லாம் நீக்கச் சொன்னாங்க. அப்போது குறுக்கிட்ட கமல், இவருக்கு நான் பதில் சொல்றதா நினைச்சிட வேண்டாம். சென்சாருக்கும் எனக்கும் நிறைய பேச்சுவார்த்தை இருக்கும். எல்லாம் நல்லபடியா தான் இருக்கும்.
Also Read: ஷங்கரிடம் கோபப்பட்ட கமல்... சாரி சொன்ன இயக்குனர்... இதெல்லாமா நடந்தது?
நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது ஸ்கூல்ல நிறைய கெட்ட வார்த்தைல கவிதை எழுதிட்டேன்னு ஒரு கம்ப்ளைன்ட் வீட்டுக்கு வந்தது. இதுல இருந்து தப்பிக்கவே முடியாது. என்னை வீட்டை விட்டே துரத்திடுவாங்கங்கற பயத்துல இருந்தேன். தகப்பனாரை ஊருல இருந்து எங்க அம்மா வரவழைச்சிட்டாங்க. இவரு அதை எல்லாம் எடுத்துப் படிச்சாரு. தமிழ்ல சந்தம், தளையும் சீரும் சரியில்லன்னாரு. பாட்டெல்லாம் நல்லாருக்குன்னாரு. கெட்டவார்த்தை எல்லாம் எழுதியிருக்கல்லன்னு கேட்டாரு. ஆமாமான்னு சொன்னேன். ஒண்ணு பண்ணு. நீ டாக்டருக்குப் படி. இதெல்லாம் பாடமா மாறிடும்னாரு.
என்னென்ன வார்த்தைகள் எல்லாம் நீ எழுதினியோ இதை டாக்டருக்குப் படிச்சா அதெல்லாம் பாடமா மாறிடும். ஒண்ணும் இல்ல. உறுப்புகள் பெயரை எல்லாம் அதில எழுதியிருப்பேன். வேற என்னங்க கெட்ட வார்த்தை? இல்லை. ஆண் மக்கள் தங்கள் செய்ய முடியாத தொழிலை பெண் மக்கள் செய்யும் அந்த பொறாமையில அந்தத் தொழில இழிவா பேசறது தான் கெட்ட வார்த்தை.
Also Read: விஜய்சேதுபதியின் டெடிகேஷனுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுப்பா! அந்த சீனில் இப்படித்தான் நடிச்சாரா?
இவங்களால செய்ய முடிஞ்சிருந்தா அது கெட்ட வார்த்தையாவே மாறியிருக்காது. இவ்ளோ தான். இந்தக் கெட்டவார்த்தைங்கறது நான் சென்சாருக்கு விடுக்கும் தூது. இதை ஒரு கலைஞன் ஜெயகாந்தன் மாதிரியான ஒருவர் தன் கதையை ஆழமாகப் பதிவு செய்வதற்கு இந்தக் கெட்டவார்த்தைப் பயன்படும். கெட்டதையும், நல்லதையும் பக்கத்துல பக்கத்துல வச்சா இது உப்பு இது காரம்னு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.