மிஸ்ஸான அஜித்தின் மூன்று படங்கள்.. அந்தப் படத்தின் மெயின் வில்லனே இவர்தானாம்..மிஸ் ஆயிடுச்சே

By :  Rohini
Update:2025-01-31 19:15 IST
aarav ajith
  • whatsapp icon

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் பிப்ரவரி ஆறாம் தேதி உலகெங்கிலும் ரிலீசாக இருக்கின்றது. படத்தை புரமோ செய்யும் பட்சத்தில் படத்தில் நடித்த ஆரவ், ரெஜினா போன்றோர் youtube சேனல்களுக்கு தொடர்ந்து பல பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இன்னொரு பக்கம் மகிழ் திருமேனி இந்த படத்தை பற்றிய அவருடைய அனுபவத்தை பல விதங்களில் பேசி வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஆரவ் அஜித்தை பற்றி சுவாரசியமான பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

சிறுவயதிலிருந்தே அஜித்தின் படத்தை பார்த்து அவரால் இம்ப்ரெஸ் ஆனவன் தான் நான். அவருடைய தீவிர வெறியன். அப்படி இருக்கும் பொழுது அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது என்று சொன்னவுடன் என்னுடைய மனநிலை எப்படி இருக்கும். அப்படி ஒரு நிலையில் தான் நான் இருந்தேன். அஜித் சாரை பார்க்கப் போகிறோம். அவருடன் பைக்கில் செல்ல போகிறோம். காரில் செல்ல போகிறோம் என பல கனவுகளுடன் இருந்தேன்.

எப்பொழுது அவரைப் பார்க்கப் போகிறேன் என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருந்தது. படப்பிடிப்பு நெருங்க நெருங்க அஜித்தை பார்க்கப் போகிறோம் என்ற எண்ணம் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. கடைசியில் அவரைப் பார்த்தேன். என்னை பார்த்ததும் ஹாய் ஆரவ் என கைகுலுக்கி எனை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றார். ஏற்கனவே ஒரு முறை அஜித்தை நான் பார்த்திருக்கிறேன்.


ஆனால் இந்தப் படத்தில் அவருடன் ஆறு மாதம் தொடர்ந்து பயணிக்கப் போகிறீர்கள் என்று சுரேஷ் சந்திரா என்னிடம் கூறியதும் ஆறு மாதமா? அதுவும் அஜித்துடனா என்று என்னை சுற்றி நிறைய பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதன் பிறகு அந்த ஸ்டண்ட் காட்சியில் எங்களுக்கு நடந்த அந்த விபத்து தான் எங்களை மேலும் நெருக்கமாக்கியது. அந்த விபத்திலிருந்து நானும் அஜித் சாரும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக மாறினோம் .

என் மீது அக்கறை கொண்டவராக மாறினார் அஜித். நானும் அவரை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க கூடாது என மிகவும் அக்கறையுடன் இருந்தேன் என்றெல்லாம் ஆரவ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் .இந்த படத்திற்கு முன்னாடியே அஜித்தின் ஒரு மூன்று படங்களுக்கு ஆரவ்வின் பெயர் அடிபட்டு வந்திருக்கிறது. நேர்கொண்ட பார்வை ,வலிமை ,துணிவு ஆகிய மூன்று படங்களுக்கும் ஆரவ்வை நடிக்க வைக்கலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு கொண்டே வந்ததாம்.

ஆனால் இது ஆரவ்விடம் தெரிவிக்கப்படவில்லையாம். ஏன் வலிமை படத்தில் கூட ஆரவ்தான் மெயின் வில்லன் என்று ஒரு பேச்சு இருந்து வந்திருக்கிறது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த வாய்ப்பு தட்டிப் போனது .கடைசியாக விடா முயற்சி படத்தில் நடந்திருக்கிறது .இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்று ஆரவ் அந்த பேட்டியில் கூறினார்.

Tags:    

Similar News