குட் பேட் அக்லியில் அஜித் போட்டிருந்த சட்டை இத்தனை கோடியா? ஆத்தாடி!!
Good Bad Ugly: அஜித்குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் குட் பேட் அக்லி டீசர் திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு தற்போது இணையத்தில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆதிக் ரவிசந்திரன் இயக்க இருக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
குட் பேட் அக்லி படத்தில் வில்லனாக அர்ஜூன் தாஸ் நடிக்க அவருக்கு பிரியா வாரியர் ஜோடியாக இருக்கிறார். இந்த ஜோடிக்காக தொட்டு தொட்டு பேசும் சில்தானா பாடல் ரீமிக்ஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியானது. 24 மணி நேரத்தில் 35 மில்லியன் வியூஸ் குவித்து கோலிவுட்டில் அதிகம் பார்க்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இதனால் விஜயின் நிறைய படங்களின் வியூஸ் சாதனை முறியடித்து இருக்கிறது.
இந்நிலையில் இந்த டீசரில் அஜித்குமார் அணிந்திருந்த சட்டையின் மதிப்பு குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன் உண்மையான விலை 1 கோடியே 80 லட்சம் எனத் தகவல்கள் கசிந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன இந்த சட்டை இவ்வளோ விலையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.