குட் பேட் அக்லி டீசர் ஹிட்டு… ஆனா மாஸ்டர் சாதனையை இன்னும் தொட முடியலையே?
Good Bad Ugly: அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி இருக்கும் நிலையில், இந்த படம் தளபதி விஜயின் மாஸ்டரின் சாதனை ஒன்றை இன்னமும் முறியடிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி என்னும் வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இதற்கு முன்னரே இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியபோது இவருக்கு ஒரு படம் அஜித் ஒப்பு கொண்டிருக்கிறார்.
ஹிட் படமாக கொடுத்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை சந்தித்து குட் பேட் அக்லி படத்தின் கதையை சொல்ல உடனே ஒப்புக்கொண்டாராம். கதை மீது உள்ள நம்பிக்கையால் தான் ஒரு படம் முடித்து வெளியாவதற்கு முன்னரே அஜித் இந்த படத்தின் சூட்டிங் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து தற்போது இன்னும் சில பேட்ச் வொர்க் பணிகள் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் 10 தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. முழுக்க முழுக்க ஆதிக் ரவிச்சந்திரன் ஸ்டைலில் அஜித் தன்னுடைய 20ஸ் ரோல்களுக்கு திரும்பி ஆச்சரியப்படுத்தி இருந்தார். இதனால் இந்த டீசர் வெளியாகி சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் வியூஸை பெற்றது.
தற்போது படத்தின் டீசர் 21 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை குவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் விஜயின் மாஸ்டர் திரைப்படம் 24 மணி நேரத்துக்குள் 19.35 மில்லியன் பார்வைகளை பெற்றது. இருந்தும் இப்படம் 2 மில்லியனுக்கும் அதிகமாக லைக்ஸ் வைத்துள்ளது.
ஆனால் குட் பேட் அக்லி திரைப்படம் 690 ஆயிரம் லைக்ஸ் மட்டுமே குவித்து இருக்கிறது. இன்னமும் ஒரு மில்லியன் கூட நெருங்கவில்லை. இதனால் விஜய் சாதனையை எல்லாத்திலும் முறியடிப்பது கஷ்டம் தான் எனவும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.