பராசக்தி படத்தில் இணையும் அந்த ஹீரோ!.. அவர் செம டெரர் பீஸ் ஆச்சே!....
Parasakthi movie: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம்தான் பராசக்தி. சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு புறநானுறு என்கிற படம் உருவானது. இந்த படம் பல வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை.
சுதா கொங்கரா: இந்த கதையில் சூர்யா சில மாற்றங்களை செய்ய சொல்ல சுதா கொங்கரா அதை ஏற்கவில்லை. எனவே, புறநானூறு படம் டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின் சிவகார்த்திகேயனிடம் சுதாகொங்கரா பேச அவர் நடிக்க சம்மதம் சொன்னார். அப்படித்தான் பராசக்தி படம் உருவானது.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டம்: இந்த படத்தில் ஜெயம் ரவி நெகட்டிவ் வேடத்திலும், அதர்வா மற்றும் தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. 1960களில் ஹிந்தி எதிர்ப்பு போரட்டத்தில் பெரும் பங்காற்றிய மொழிப்போர் தியாகி ராஜேந்திரனின் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
உன்னி முகுந்தன்: இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து முடிந்திருக்கிறது. திறந்தவெளி மைதானத்தில் சில காட்சிகளை எடுத்துள்ளார் சுதா கொங்கரா. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளாராம்.
அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவர் ஏற்கனவே சூரி, சசிக்குமார் நடித்த கருடன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் மார்கோ என்கிற படமும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. மலையாளத்தில் பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். புதுப்புது நடிகர்கள் படத்தில் இணைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பராசக்தி படத்தை முடித்தவுடன் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதாக இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், சிபி தெலுங்கு சினிமா ஒன்றை இயக்கவுள்ளதால் அது தள்ளி போய்விட்டது. எனவே, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை மற்றொரு இயக்குனர் இயக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது. ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம் உருவாகி பாதி முடிவடைந்திருக்கிறது.