சம்பளமே வாங்காம சிம்பு நடிக்கும் STR51!.. அதுல ஒரு உள்குத்து இருக்காம்!....
STR51: சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. அப்பா டி.ராஜேந்தரால் சினிமாவில் அறிமுகம் செய்யப்பட்டு சிறு வயதிலேயே ஹிட் படங்களை கொடுத்தார். காதல் அழிவதில்லை படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக நடிக்க துவங்கினார். ரஜினியை பின்பற்றி மாஸ் காட்டுவது, கை விரல்களால் மேனரிசம் செய்வது, பன்ச் வசனம் பேசுவது என ரசிகர்களிடம் பிரபலமானார்.
நடிகர், கதாசிரியர், இயக்குனர், பாடகர் என இவருக்கு பல முகங்கள் உண்டு. எல்லா திறமைகளும் இருந்தும், நிறைய ரசிகர்கள் இருந்தும் இன்னும் முன்னணி நடிகர்களில் இவரின் பெயர் இல்லை. அதற்கு காரணம் தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் நடிகர் சிம்பு இல்லை. அவரின் நடிப்பில் 2 வருடங்களுக்கு ஒரு படம் வெளியாகி வருகிறது.
மாநாடு படம் ஹிட் கொடுத்தும் அந்த வெற்றியை சிம்பு பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதன்பின் வெளிவந்த வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் வெற்றியை பெறவில்லை. அதன்பின் நடிப்புக்கு பெரிய இடைவெளிவிட்டார் சிம்பு. முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே சுற்றி வந்தார்.
அப்போதுதான் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிக்க, தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல மாதங்கள் ஆகியும் அது டேக் ஆப் ஆகவில்லை. அந்த படத்திற்கு 150 கோடி பட்ஜெட் என இயக்குனர் சொல்ல கமல் 100 கோடி மட்டுமே கொடுக்க முடியும் என சொல்ல அது நடக்கவில்லை.
ஒருகட்டத்தில் இந்த படத்தை தானே தயாரிப்பது என முடிவெடுத்தார் சிம்பு. ஆத்மன் சினி ஆர்ட்ஸ் என்கிற பெயரில் சிம்புவின் 50வது படமாக இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு முன் பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
ஒருபக்கம், ஓ மை கடவுளே பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இது சிம்புவின் 51வது திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்திற்கு காதலின் கடவுள் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்திற்கு இன்னமும் சிம்புவின் சம்பளம் பேசப்படவில்லை. தக் லைப் படத்தின் வசூல் எவ்வளவு என்பதை பார்த்துவிட்டே சிம்புவின் சம்பளம் நிர்ணயிக்கப்படவுள்ளதாம். இந்த படம் 2026 கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.