ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம்.. மிஸ் பண்ண விதார்த்! அதுவும் இப்போ ரிலீஸான அந்தப் படமா?
தமிழ் சினிமாவில் தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பல நல்ல படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விதார்த். இவர் முதல் முதலில் நடித்த மைனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் அவருடைய நடிப்புதான் ஹைலைட்.
குறைவான படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. குறிப்பாக அஞ்சாமை, ஆயிரம் பொற்காசுகள், அன்பறிவு போன்ற படங்களை குறிப்பிடலாம். இப்போது வெப் சீரிசிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
சினிமாவைப் பற்றி இவருடைய பொதுவான கருத்து என்னவெனில் திறமைசாலிகளுக்கு இங்கு இடம் இல்லை என்பது தான். அதாவது பெரிய பெரிய இயக்குனர்கள் பெரிய நடிகர்களை பார்த்து தான் ஓடுகிறார்கள். எங்களை போன்ற சின்ன நடிகர்களை கண்டு கொள்வதே இல்லை என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.
அவர் சொல்வதைப் போல சமீபகாலமாக சின்ன சின்ன பட்ஜெட் படங்கள் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்ட நிலைமைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அனைத்துமே வசூலில் மண்ணை கவ்வியிருக்கிறது. அதனால் எத்தனை கோடி தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமானது என அனைவருக்கும் தெரியும்.
அந்த வகையில் விதார்த் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்திருக்கின்றன. ஆனால் அவரை இந்த சினிமா கண்டு கொள்வது இல்லை என்பதுதான் உண்மை. இருந்தாலும் தனக்கு ஏற்ப நல்ல கதைகள் வரும்பொழுது அதை பயன்படுத்திக் கொள்கிறார் விதார்த்.
ஆனால் அவரை தேடி ஒரு பெரிய படத்தின் வாய்ப்பு வர அதை கலைப்புலி எஸ் தானு வேறொரு நடிகருக்கு மாற்றி இருக்கிறார். அந்தப் படமும் இப்போது ரிலீசாகி பெரிய அளவில் வெற்றி பெற்று இருக்கிறது. அது வேறு எந்த படமும் இல்லை மேக்ஸ் திரைப்படம்.
சுதீப் நடிப்பில் கன்னடம் தமிழ் என பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது தான் இந்த மேக்ஸ் திரைப்படம். இது கன்னடத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர் .இந்த படத்தின் கதையை இயக்குனர் கலைப்புலி தாணுவிடம் கூறிய போது விதார்த் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி இருக்கிறார். ஆனால் தாணு என்னிடம் சுதீப் கால்ஷீட் இருக்கிறது. அவரை இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என சொன்னதின் பேரில் தான் இந்த மேக்ஸ் திரைப்படத்தில் சுதீப் நடித்தாராம். இல்லையென்றால் விதார்த் தான் இந்த படத்திற்கு ஒப்பந்தமாகி இருப்பார்.