நடுராத்திரி சரவெடி இருக்கு!.. அனிருத் போட்ட ட்வீட்!.. விஜய் ரசிகர்களுக்கு இன்னைக்கு தூக்கம் போச்சு!..

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில், ஷார்ப்பாக நள்ளிரவு 12 மணிக்குத்தான் அப்டேட்டை வெளியிடுவோம் என ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்துள்ளனர் கேவிஎன் நிறுவனம்.;

By :  SARANYA
Published On 2025-06-21 18:52 IST   |   Updated On 2025-06-21 18:52:00 IST

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது அனிருத் தற்போது வெளியிட்டுள்ள பதிவை பார்த்தாலே புரிந்து விட்டது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் முதல் சில பல போஸ்டர்கள் வெளியாகி விட்ட நிலையில், படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகுமா? அல்லது ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகுமா என்று தான் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதற்கு ஏற்றார் போல ஃபர்ஸ்ட் ரோர் பாடல் இன்று நள்ளிரவு வெளியாகிறது.

நடிகர் விஜய் சினிமாவில் அறிமுகம் ஆனதில் இருந்து இத்தனை ஆண்டுகளும் தனது பாடல்களால் ரசிகர்களை அதிகம் கவர்ந்து ஆட வைத்துள்ளார். இந்நிலையில், அவரது கடைசி படத்திலும் அனிருத் இசை என்பதால் ஏகப்பட்ட வேறலெவல் சம்பவங்கள் களைகட்டும் என்பது உறுதியாகவே தெரிகிறது.


இதுவரை எச். வினோத் இயக்கத்தில் வெளியான படங்களில் ரசிகர்கள் குத்தாட்டம் போட்டது போல அதிகளவில் பாடல்கள் இடம்பெறவில்லை. “நாங்க வேறமாறி” பாடல் மட்டுமே கொஞ்சம் ஆட்டம் போட வைத்தது. ஆனால், இது தளபதி கோட்டை என்பதால், இந்த முறை எச். வினோத் படத்திலும் அந்த அதிசயத்தை ரசிகர்கள் பார்க்கப் போகின்றனர்.

மேலும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில், ஷார்ப்பாக நள்ளிரவு 12 மணிக்குத்தான் அப்டேட்டை வெளியிடுவோம் என ரசிகர்களின் தூக்கத்தை தொலைக்க வைத்துள்ளனர் கேவிஎன் நிறுவனம். இப்போதே, விஜய் பிறந்தநாளுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் விஜய் வெற்றிப் பெறவும் பலரும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன் என நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ஜன நாயகன் படத்தில் இருந்து என்ன மாதிரியான பாடல் வரப்போகிறது என்பதை காத்திருந்து காண்போம்.

Tags:    

Similar News