கவுண்டமணிக்கிட்ட அஜித் கத்துக்கணும்!.. இந்த வயசிலும் எப்படி புரமோஷன் பண்றாரு!...
Goundamani: கோவையை சேர்ந்த கவுண்டமணி நாடகங்களில் நடித்து வந்தவர். சினிமாவை விட அதிகமான கதாபாத்திரங்களில் நாடகங்களில்தான் கவுண்டமணி நடித்திருக்கிறார். 60களிலேயே சில கருப்பு வெள்ளை படங்களில் ஒரு காட்சியில் வரும் நடிகராக நடித்திருக்கிறார். பாக்கியராஜின் உதவியால் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் நடித்தார்.
80களில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். செந்திலை தன்னோடு சேர்த்துக்கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்தார். இருவரும் இணைந்து பல நூறு படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்கள். 80,90களில் படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி - செந்தில் தேவை என்கிற நிலை உண்டானது.
நம்பர் ஒன் காமெடி நடிகர்: ஒருகட்டத்தில் படத்தின் இரண்டாவது ஹீரோவாகவே கவுண்டமணி மாறினார். சத்தியராஜ், பிரபு, கார்த்திக், சரத்குமார், ராமராஜன் போன்றவர்கள் தங்களின் படங்களில் கவுண்டமணி இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள். ஒரு நாளைக்கு இவ்வளவு லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகரும் கவுண்டமணிதான்.
வேலையில் சின்சியாரிட்டி: கவுண்டமணி செமயாக நக்கலடிப்பார், திமிறாக பேசுவார் என்றெல்லாம் இவர் மீது விமர்சனம் உண்டு. ஆனால், தொழிலில் மிகவும் சின்சியராக இருப்பார். வடிவேலுவை காலை 7 மணிக்கு வர சொன்னால் மதியம் 12.30 மணிக்கு வருவார். உடனே இடை வேளை. குட்டி தூக்கம் என 3.30 மணிக்கு வருவார். மாலை 5 மணிக்கு போய்விடுவார். இத்தனைக்கும் அப்போது ஒரு நாளைக்கு 10 லட்சம் சம்பளம் வாங்கி கொண்டிருந்தார். ஆனால், கவுண்டமணியெல்லாம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இருந்து நடித்து கொடுப்பார். இயக்குனர் என்ன கேட்டாலும் அதை செய்துவிடுவார்.
ஒத்த ஓட்டு முத்தையா: கடந்த சில வருடங்களாக வயது முதிர்வு காரணமாக அவர் திரைப்படங்களில் நடிப்பதில்லை. இந்நிலையில்தான், அவரின் நடிப்பில் உருவாகியுள்ள ஒத்த ஓட்டு முத்தையா படம் விரைவில் வெளியாகவுள்ளது. அஜித்தெல்லாம் அவர் நடிக்கும் புரமோஷனுக்கே வருவதில்லை. ஆனால், 85 வயதிலும் இந்த பட விழாவில் கவுண்டமணி கலந்துகொண்டார். மேலும், அவரின் வழக்கமான ஸ்டைலில் பேசி கலகலப்பு ஊட்டினார்.
‘திரும்ப திரும்ப சொல்றேன்.. ஒத்த ஓட்டு முத்தையா படத்தை பாருங்க.. திரும்பி பாத்தும் சொல்றேன் இந்த படத்தை பாருங்க’.. என பேசி எல்லோரையும் சிரிக்க வைத்தார். மேலும், அந்த படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், எடிட்டர் என எல்லோருக்கும் நன்றி சொன்ன கவுண்டமணி ‘இன்னும் சந்து புந்துல யார் இருந்தாலும் அவங்க எல்லாருக்கும் நன்றி. வணக்கம். வெல்கம், தேங்க்யூ’ என பேசி சிரிக்கவைத்தார். மேலும், ஒத்த ஓட்டு முத்தையாவை வெற்றி ஓட்டு முத்தையாவாக மாற்றுவது உங்கள் பொறுப்பு என்றும் பேசினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ‘தலைவர் ராக்ஸ்.. கவுண்டமணி இஸ் பேக், இந்த வயதிலும் கவுண்டமணி தான் நடிக்கும் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் வந்து பேசுகிறார். அஜித் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.