என் சிம்பொனி இப்படி இருக்கக் கூடாது!.. பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லி ஹைப் ஏத்தும் ராஜா!...

By :  Murugan
Update: 2025-02-04 13:14 GMT

Ilayaraja symphony: கடந்த 50 வருடங்களாக இசையால் எல்லோரையும் மகிழ்வித்து வருபவர் இளையராஜா. தமிழ் சினிமா பாடல்கள் பெரிதாக கவனம் பெறாத கால கட்டத்தில் சினிமாவில் நுழைந்து தன்னுடைய இசை மூலம் எல்லோரையும் கட்டிப்போட்டவர் இவர். இவர் இசையமைக்க துவங்கிய பின் எல்லா இடத்திலும் இவரின் பாடல்தான் ஒலித்தது.

80களில் உருவான பெரும்பாலான திரைப்படங்களில் இவரின் இசையே இடம் பெற்றிருந்தது. சினிமாவில் கிளாசிக், வெஸ்டர்ன், கர்நாட்டிக், நாட்டுப்புறப்பாட்டு என பலவகையான இசைகளை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் இளையராஜா. இளையராஜாவுக்கு கர்நாடக இசை வராது என்றார்கள். அதை முறையாக கற்றுக்கொண்டு சிந்து பைரவி படத்தில் பதில் சொன்னார் ராஜா.

யாரேனும் ஒரு ஹிந்தி பாடலை மேற்கோள் காட்டி இது போல ஒரு பாடல் வேண்டும் என சொன்னால் அதை காப்பி அடிக்காமல் தனது ஸ்டைலில் அதுபோல ஒரு பாடலை போட்டு கொடுத்தார். இவர் இசையமைத்த ‘ஹேப்பி நியூர்’ பாடல்தான் இப்போதும் புது வருடம் துவங்கும்போது ஒலிக்கப்படுகிறது.


சினிமா இசை மட்டுமில்லாமல் சிம்பொனி இசையையும் ராஜா உருவாக்கி வருகிறார். இந்நிலையில், இது பற்றி ஊடகமொன்றில் பேசிய இளையராஜா ‘நான் ஒரு இந்தியன். சவுத் இண்டியாவில் ஒரு குக்கிரமத்தில் பிறந்தவன். சின்ன வயது முதல் நான் கேட்ட இசையின் தாக்கம் இதில் வரக்கூடாது. சினிமாவுக்கு இசையமைப்பவர் என்பதும் தெரியக்கூடாது. சினிமாவுக்கு நான் இசையமைத்த பின்னணி இசையும் இதில் வந்துவிடக்கூடாது. இந்திய இசையும் இதில் வரக்கூடாது.

அப்படி வந்துவிட்டால் ‘யாரே ஒரு இந்தியன் ஏதோ இசையமைத்துள்ளான்’ என சொல்வார்கள். எனவே, உண்மையிலேயே சிம்பொனி இசை என்றால் என்ன என தெரிந்துகொண்டு செய்ய வேண்டும். அதேபோல், உலகத்தின் தலை சிறந்த இசையமைப்பாளர்கள் என்ன இசையை கொடுத்தார்களோ அதுவும் வந்துவிடக்கூடாது. அப்படி ஒரு சிம்பொனியை இசையைத்தான் நான் உருவாக்கியிருக்கிறேன்’ என சொல்லி இருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் சிம்பொனி இசையின் ஒரு பகுதி வெளியானது. விரைவில் அதன் தொடர்ச்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News