பேன் இந்திய டைரக்டர் மட்டுமில்ல.. பேன் இந்திய டான்ஸரும் கூட! ராஜமவுலியின் அசத்தலான டான்ஸ் வீடியோ

By :  Rohini
Update: 2024-12-15 09:54 GMT

rajamouli

பாகுபலிக்கு முன்பு வரை சில படங்களை இயக்கி இருந்தாலும் பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார் இயக்குனர் ராஜமவுலி. பாகுபலி 1, 2 என இரண்டு பாகங்களாக படத்தை எடுத்து வசூலிலும் பெரிய சாதனையை படைத்தார் ராஜமவுலி. அதற்கு அடுத்தபடியாக அவர் இயக்கிய ஆர்ஆர்ஆர் திரைப்படம் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

குறிப்பாக இந்த படத்தில் அமைந்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இவர் தெலுங்கில் மிகப்பெரிய திரைப்பட இயக்குனராக இருந்தாலும் தமிழ் நான் ஈ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையும் பிரபலமடைந்தார். இவரின் முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர் ஒன். இதில் கதாநாயகனாக ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார். ஜூனியர் என்டிஆருக்கும் இந்த படம் தான் முதல் வெற்றி படமாக அமைந்தது.

ராஜமௌலி பொருத்தவரைக்கும் அவர் இயக்கிய அத்தனை படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தன. ஸ்டுடென்ட் நம்பர் ஒன் என்ற பெயரிலேயே இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டது இவர் எடுத்த பல தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருக்கின்றன. அதில் மிகவும் பிரபலம் அடைந்த திரைப்படங்களான சிறுத்தை, மாவீரன் போன்ற திரைப்படங்களை குறிப்பிடலாம்.

நான் ஈ என்ற திரைப்படத்தை நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கினார். இவருடைய அனைத்து படங்களுக்கும் இசை அமைப்பாளராக மரகதமணி தான் பணியாற்றினார். நாட்டு நாட்டு பாடலுக்காக மரகதமணிக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருதுக்கான ஆஸ்கார் விருதும் கிடைத்தது. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும் ராஜமவுலி ஒரு பெஸ்ட் டான்ஸர் என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ இப்போது வைரல் ஆகி வருகின்றது.

முறைப்படி டான்ஸ் கற்றுக் கொண்டவர்களாலேயே இந்த அளவுக்கு ஆட முடியுமா என்பது சந்தேகம் தான். அந்த அளவுக்கு ஒரு மேடையில் அவர் டான்ஸ் ஆடும் வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.


Full View
Tags:    

Similar News