ரிலீஸ்க்கு முன்னாடியே பல கோடிக்கு கல்லாகட்டிய வீர தீர சூரன்!.. கெத்து காட்டுறாரே விக்ரம்!..
நடிகர் விக்ரம்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் கடைசியாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருப்பினும் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
வீர தீர சூரன்:
தங்கலான் திரைப்படத்தை முடித்த கையோடு இயக்குனர் எஸ்யு அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்கின்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கம்மிட்டானார் நடிகர் விக்ரம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.
இந்த திரைப்படத்தில் உள்ள சுவாரஸ்யம் என்னவென்றால் இப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்திய சினிமாவில் இல்லாத அளவுக்கு முதலில் இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருப்பதாகவும், அதன் பிறகு முதல் பாகம் வெளியாக இருப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தில் காளி என்கின்ற கேங்ஸ்டர் வேடத்தில் நடிகர் விக்ரம் நடித்திருக்கின்றார். மேலும் எஸ்.ஜே சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கின்றார். இப்படத்தின் டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
படத்தின் வியாபாரம்:
வீர தீர சூரன் படத்தின் டீசருக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படத்திற்கான வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பரபரப்பான ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகியுள்ள நிலையில் நிச்சயம் திரையரங்குகளில் படம் ஹிட்டடிக்கும் என்பதால் போட்டி போட்டுக் கொண்டு வியாபாரம் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த திரைப்படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் டிவி உரிமை மட்டும் 60 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழக திரையரங்குகள் உரிமை 20 கோடிக்கும் விற்பனையாகி இருக்கின்றதாம். மற்ற மாநிலங்கள் வெளிநாட்டு உரிமை அதுவும் எப்படியும் 20 கோடிக்கு மேல் அதிகமாக விற்பனையாகும் என்று கூறப்படுகின்றது.
இதனால் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னதாகவே 110 லிருந்து 120 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வர இருப்பதால் வீர தீர சூரன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறி வருகிறார்கள். விரைவில் ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வீர தீர சூரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக மண்டேலா, மாவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் இந்த படத்திற்கு நடிகர் விக்ரம் 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.