வசமா சிக்கிய அல்லு அர்ஜூன்!. புஷ்பா 3-க்கு வந்த ஆப்பு!.. இப்படி ஆகிப்போச்சே!..
புஷ்பா 2 கலவரம்:
தெலங்கானாவே இப்போது ஒரே பரபரப்பில் இருக்கிறது. புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி அதன் முதல் நாள் காட்சியை பார்க்க போன இடத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வந்ததால் தான் இவ்வளவு பெரிய கூட்டம் ஏற்பட்டதாகவும் அந்த கூட்டத்தில் சிக்கிதான் அந்தப் பெண் இறந்ததாகவும் அவர் மீது காவல்துறையினர் வழக்கு தொடர்ந்து கைது செய்தனர். ஆனால் கைது செய்த சில மணி நேரங்களிலேயே அல்லு அர்ஜுன் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் இது சம்பந்தமாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனுக்கு எதிராக அவருடைய கருத்துக்களை கூறிக் கொண்டே வருகிறார். இதை சட்டமன்றம் வரையிலும் எடுத்துச் சென்று பெரும் பிரச்சனையாக்கி இருக்கிறார். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதாவது ஒரு முதல்வராக இருந்து கொண்டு எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு வரைமுறை இருக்கிறது. ஆனால் சட்டமன்றத்தில் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனை பற்றி கூறும் போது அவருக்கு என்ன கால் உடைந்து விட்டதா? கை செயலிழந்து விட்டதா ?சிறுநீரகப் பிரச்சினையா என்றெல்லாம் கேள்வி கேட்டு, இங்குள்ள நடிகர்கள் அவரை போய் பார்க்க காரணம் என்ன ?
தூண்டி விடும் நோக்கம்:
இதுவரை அந்த சிறுவனை போய் பார்த்தார்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார். என்னதான் ஒரு முதல்வராக இருந்தாலும் எப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாதா ?அது மட்டுமல்லாமல் அங்கு இருக்கும் ஆளுங்கட்சியினர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக பேசுவதைப் போல தொண்டர்களை தூண்டி விடும் சம்பவம் தான் அரங்கேறி வருகிறது. கல் எறியாதே, கலவரம் செய்யாதே என ஒவ்வொன்றாக அவர்கள் சொல்ல சொல்ல அதைத்தான் தொண்டர்களும் இப்போது செய்து வருகின்றனர்.
அதுவும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக அவர் இன்னும் பல பிரச்சினைகளை கிளப்புவார் என்று தெரிகிறது. இதற்கிடையில் புஷ்பா 2 திரைப்படம் 1500 கோடிக்கும் அதிகமாக வசூலை பெற்ற நிலையில் அந்தப் படத்தின் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். பிரமோஷனுக்கு பல இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்த அல்லு அர்ஜுன் படத்தின் வெற்றியையும் அதே மாதிரி பல்வேறு ஊர்களுக்கு சென்று கொண்டாட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தார்.
புஷ்பா 3ல் இருக்கும் பிரச்சினை
ஆனால் அந்த வெற்றியை கொண்டாட முடியாத அளவுக்கு அவருக்கு ஒரு பெரும் சோகம் நடந்துவிட்டது. இதற்கிடையில் புஷ்பா 3 திரைப்படமும் நடக்குமா நடக்காதா என்ற ஒரு சந்தேகமும் இப்போது கிளம்பி இருக்கிறது. சரி புஷ்பா 3 திரைப்படத்தை ஆந்திராவில் உள்ள இடங்களில் எடுத்தாலும் அதன் ரிலீஸ் பிரச்சனையில் கண்டிப்பாக தெலுங்கானா அரசு தலையிடும். அதுவரை ரேவந்த் ரெட்டி கோபமாக இருந்தால் புஷ்பா 3 திரைப்படம் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்படும் என வலைப்பேச்சு அந்தணன் கூறினார்.
இதற்கிடையில் ஒரு நடிகரை கார்னர் செய்து அதுவும் ஒரு முதல்வராக இருந்து கொண்டு அடிப்பது என்பது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. ஏனெனில் இன்னும் ஐந்து வருடம் கழித்து எலக்சன் வரும். அதிக ரசிகர் பலத்தை உடைய அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் நாளை நமக்கு ஓட்டு போடுவார்களா மாட்டார்களா என்பதை எல்லாம் பற்றி ரேவந்த் ரெட்டி யோசிக்கவே இல்லை. இதிலிருந்து தொடர்ந்து அல்லு அர்ஜுனை சீண்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது .
மீண்டும் கைது?
ஏனெனில் அவர் ஏற்கனவே அல்லு அர்ஜுனிடம் சொன்னதாக ஒரு தகவல் இப்போது பரவி வருகிறது. அது என்னவெனில் என்னுடைய பெயரை மறந்தீல்ல, இனிமேல் உன் வாழ்நாள் முழுக்க என்னை மறக்காதவாறு ஒன்னு செய்கிறேன் என்று சொன்னதாக ஒரு செய்தி பரவி வருகிறது. அதைத்தான் சட்டம் அதன் கடமையை செய்யும் என்பதைப் போல சொல்லி இருப்பதாகவும் தெரிகிறது. அதனால் சட்டத்தின் முன் அவர்களை நிறுத்தி சட்ட ரீதியாக அவர்களுக்கு தண்டனையை வாங்கி தருவோம் என்று சொன்னதாகவும் தெரிகிறது. இதை அடுத்து அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் மறுக்கப்படும். மீண்டும் அவர் சிறைக்கு செல்வார் என்றெல்லாம் ஒரு தகவல் பரவி வருகிறது.