விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. 'சாவடிக்க' போகும் அஜித்.. லுக்கே வேற மாதிரி இருக்கே!..

By :  Ramya
Update: 2024-12-23 13:09 GMT

ajith 

விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் அஜித்தும் ஒருவர். தனது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து கமிட்டான திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் முதலே பல பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டது.

லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்த இந்த திரைப்படத்தில் ஆரம்பமே இயக்குனர் பிரச்சனையோடு ஆரம்பித்தது ஒரு வழியாக கடைசியில் மகிழ்திருமேனி படத்தை இயக்குவதற்கு கமிட்டானார். ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டது. அஜர்பைஜானின் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் கால சூழ்நிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாகி வந்தது.


இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கின்றார். மேலும் அர்ஜுன், ரெஜினா, ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஒருவழியாக இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் சமீபத்தில் தான் முடிவடைந்தது. படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கின்றார்.

மேலும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படம் ஹாலிவுட் தரத்திற்கு சூப்பராக இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தார்கள். இதற்கு இடையில் படத்தில் ஒரு பாடல் காட்சி மற்றும் பேட்ச் வொர்க் இருப்பதால் பாங்காக்கில் படத்தின் மீத காட்சிகள் எடுத்திருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.

மேலும் நடிகராக அஜித் மீண்டும் உடல் எடையை குறைத்து தனது பழைய லுக்கிற்கு திரும்பி இருக்கின்றார். இப்படி நடிகர் அஜித்தை பார்ப்பதற்கு மிகவும் சூப்பராக இருப்பதாக தொடர்ந்து ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி அந்த திரைப்படமும் முழுவதும் முடிவடைந்து விட்டது.


இப்படம் வரும் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அனிருத் இசையில் 'சாவடிக்க' பாடல் வெளியாக இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் கூறப்பட்டு வருகின்றது. ஆனால் எப்போது வெளியாகும் என்பது இன்னும் தெரிய வரவில்லை.

Tags:    

Similar News