அஜித் பேச்சை கேட்காத ரசிகர்கள்.. மீண்டும் ஒலித்த கோஷம்.. ஆனா இப்போ இங்கேயுமா?..
நடிகர் அஜித்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது தனது கைவசம் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களை வைத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வெளியீட்டிற்கு தயாராகி இருக்கின்றது.
விடாமுயற்சி:
விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கின்றது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். அதற்கு காரணம் கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்பதற்காகத்தான்.
குட் பேட் அக்லி:
விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் கம்மிட்டான திரைப்படம் தான் குட் பேட் அக்லி. ஆதித் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த திரைப்படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மே மாதம் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தின் கோரிக்கை:
நடிகர் அஜித் பல வருடங்களுக்கு முன்பே தனக்கு ரசிகர்கள் மன்றம் எதுவும் வேண்டாம் என்று அனைத்தையும் கலைத்தவர். அதேபோல்தான் கடந்த வருடம் தனது பெயருக்கு பின்னால் இருக்கும் அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல என்கின்ற பட்டமும் வேண்டாம் என்று கூறியிருந்தார். தன்னை ஏகே என்றும் அல்லது அஜித் என்றும் அழைத்தால் போதுமானது என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் நடிகர் அஜித்தை தல என்று அழைக்காமல் இருந்து வந்தார்கள். அதற்கு பதிலாக கடந்த சில நாட்களாக கடவுளே அஜித்தை என்று கோஷமிட்டு வந்தார்கள். பொது இடங்களிலும் பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் சமயங்களிலும் இப்படி அவர்கள் கூச்சலிடுவது பெரும் அசவுரியத்தை ஏற்படுத்தி வந்தது.
இதனை புரிந்து கொண்ட அஜித் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். தன்னை இதுபோல அழைக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். ஆனால் அஜித் ரசிகர்கள் அவர் கூறுவதை சரியாக பின்பற்றுவதே கிடையாது. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அதாவது திருமண மேடையில் மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக்கொண்டு தாலி கட்டும் சமயத்தில் அங்கிருந்த நண்பர்கள் அனைவரும் 'கடவுளே அஜித்தே, கடவுளே அஜித்தே' என்று கத்தி கத்தி கோஷம் இடுகிறார்கள். இதை பார்த்த பலரும் அந்த மனுஷன் எவ்வளவு அன்பாக ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அதை எதையுமே நீங்கள் சரியாக செய்யவே மாட்டீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.