தனுஷ் சென்னை வந்தது இதுக்குத்தானா? அப்போ ‘இட்லி கடை’ படத்தின் நிலைமை?

By :  Rohini
Update: 2024-12-23 11:25 GMT

dhanush

தனுஷ்:

இப்போது இருக்கும் தமிழ் நடிகர்களில் கைவசம் அதிக படங்களை வைத்திருக்கும் நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ஓரளவு ரசிகர்களை திருப்தி படுத்தியது. அது அவருடைய ஐம்பதாவது திரைப்படம். அதன் காரணமாகவே ராயன் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

அதற்கு அடுத்தபடியாக அவருடைய நடிப்பில் தயாராகிக் கொண்டிருப்பது இட்லி கடை. ராயன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அந்தப் படத்தை தனுஷ் தானே இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி அந்தப் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் தனுஷ்.

இட்லி கடை:

இட்லி கடை திரைப்படத்தையும் அவரே இயக்கி அதில் நடிக்கவும் செய்கிறார். அந்தப் படத்தில் அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார். நித்யா மேனன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தேனீ உள்பட சுற்றுப்புற ஏரியாக்களில் படமாக்கப்பட்டு வந்தது. அடுத்ததாக படத்தின் படப்பிடிப்பு ஜமைக்காவிற்கு செல்ல இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் தனுஷின் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியானது. விமான நிலையத்தில் அவசர அவசரமாக அவர் வெளியே வருவதும் காரில் ஏறுவது மாதிரியும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. அப்போது ரசிகர் ஒருவரின் செல்போனை தனுஷுடன் வந்த பவுன்சர் ஒருவர் தட்டிவிட அதை தனுசே எடுத்து அந்த ரசிகரிடம் ஒப்படைத்த பதிவும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

உடல் நிலை சரியில்லையா?:

இது அவர் லண்டனில் இருந்து தான் சென்னைக்கு வந்திருக்கிறார் என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பில் இருந்து தான் அவர் சென்னைக்கு வந்திருக்கிறார். அது மட்டுமல்ல படத்தின் மொத்த படக் குழுவும் சென்னை திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது.


அதற்கு காரணம் படப்பிடிப்பில் திடீரென தனுஷுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம். ஒரு இரண்டு நாட்கள் எப்படியோ தாக்குப்பிடித்துக் கொண்டாராம். ஆனால் அதன் பிறகு அவரால் முடியவில்லை. அதன் காரணமாகவே தான் சென்னை திரும்பி விட்டதாக சொல்லப்படுகிறது. உடல்நிலை சரியானதும் மீண்டும் அவர் படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News