தளபதினா பின்ன சும்மாவா!.. 14 ல் 9-யை தட்டி தூக்கிய தளபதி.. எல்லாமே மாஸ் ரெக்கார்டு தான்..
2024 ஆம் ஆண்டு இன்னும் கொஞ்சம் நாட்களில் முடிவடைய இருக்கின்றது. இதனால் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் எந்த திரைப்படம் வெற்றியைப் பெற்றது. எந்த நடிகரின் படம் முதல் இடத்தை பிடித்தது என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் 460 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்திருக்கின்றது.
கோட் திரைப்படம்:
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் கோட். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் படம் பாக்ஸ் ஆபீஸில் 460 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த படங்களில் முதல் இடத்தில் இருக்கின்றது. இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது மேலும் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
14ல் 9 வருடம்:
கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை மொத்தம் 14 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. அப்படி இந்த 14 வருடத்தில் 9 வருடத்தில் நடிகர் விஜய்யின் திரைப்படம் தான் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. அது என்னென்ன படங்கள் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
2011 ஆம் ஆண்டு - ஏழாம் அறிவு
2012 ஆம் ஆண்டு - துப்பாக்கி
2013 ஆம் ஆண்டு - சிங்கம் 2
2014 ஆம் ஆண்டு - கத்தி
2015 ஆம் ஆண்டு - ஐ
2016 ஆம் ஆண்டு - தெறி
2017 ஆம் ஆண்டு - மெர்சல்
2018 ஆம் ஆண்டு - சர்கார்
2019 ஆம் ஆண்டு - பிகில்
2020 ஆம் ஆண்டு - தர்பார்
2021 ஆம் ஆண்டு - மாஸ்டர்
2022 ஆம் ஆண்டு - பொன்னியின் செல்வன்
2023 ஆம் ஆண்டு - லியோ
2024 ஆம் ஆண்டு - த கோட்
மொத்தம் 14 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது நடிகர் விஜயின் திரைப்படம் தான். இதில் 2012 ஆம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 125 கோடி ரூபாய் வசூல் செய்தது. அடுத்ததாக 2014 ஆம் ஆண்டு வெளியான கத்தி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 130 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது .
அட்லி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான தெறி திரைப்படம் 158 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வெளியான மெர்சல் திரைப்படம் மொத்தம் 235 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருக்கின்றது. 2018 ஆம் ஆண்டு வெளியான சர்க்கார் திரைப்படம் 246 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான மாஸ்டர் திரைப்படம் மற்றும் 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ திரைப்படம் இரண்டுமே கிட்டத்தட்ட 350 இலிருந்து 400 கோடி ரூபாய் வரை பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்திருந்தது .
கடைசியாக 2024 ஆம் ஆண்டு இந்த வருடம் வெளியான கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 460 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கின்றது. ஒவ்வொரு வருடமும் தனது திரைப்படத்தின் மூலமாக பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை நிரூபித்து இருக்கின்றார் நடிகர் விஜய்.