30வருஷத்துல யாரும் கேட்காத கேள்வியை கேட்ட விஜய்சேதுபதி! உறைந்து போன சுந்தர் சி
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வருபவர் சுந்தர் சி. இவருடைய படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த குடும்ப திரைப்படங்களாகவே அமைந்திருக்கின்றன. முதன் முதலில் முறை மாமன் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சுந்தர் சி. அந்தப் படத்தில்தான் குஷ்பூவும் நடிக்க அதிலிருந்தே இருவருக்குமான காதல் ஆரம்பமானது.
சுந்தர் சி படங்கள் என்றாலே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக இவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் கவுண்டமணி காமெடிதான் ஹைலைட். குறிப்பாக உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் எவர் கிரீன் நகைச்சுவை திரைப்படமாகும். கவுண்டமணிக்கு பிறகு வடிவேலுவின் காமெடி சுந்தர் சியின் படங்களுக்கு பெரிதும் உதவியது. குறிப்பாக நாய்சேகர் காமெடி இன்றளவும் பேசப்படும் காமெடியாகவே பார்க்கப்படுகிறது.
இப்போது வரை சுந்தர் சி மற்றும் வடிவேலுவின் காம்போவில் வெளியான காமெடி இன்றளாவும் காமெடி சேனல்களில் பிரதான இடத்தை பிடித்துவருகிறது. இந்த நிலையில் சுந்தர் சியிடம் விஜய்சேதுபதி கவுண்டமணியின் ஒரு காமெடி காட்சியை பற்றி விவாதித்தது பெரும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது என ஒரு பேட்டியில் சிலாகித்து பேசியிருக்கிறார் சுந்தர் சி.
முறைமாமன் படத்தில் வரும் ‘திரௌபதி அழகு கௌரவர்களை அழிக்க, கண்ணகி அழகு மதுரையை எரிக்க, இந்த அழகு யார் குடியைக் கெடுக்க?’ என்று கவுண்டமணி பேசும் வசனத்திற்கு விஜய்சேதுபதி மிகப்பெரிய ரசிகராம். இந்த வசனத்தை சொல்லி என்னிடம் ‘எப்படி எழுதினீங்க’ என்று கேட்டார். படம் ரிலீஸாகி 30 வருஷத்துக்கும் மேலாகிறது. ஆனால் இத்தனை வருடங்களில் யாருமே இத நோட் பண்ணி என்னிடம் கேட்டதில்லை என சுந்தர் சி நெகிழ்ந்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
தற்போது சுந்தர் சி தன்னுடைய டிராக்கையே மாற்றியிருக்கிறார். நகைச்சுவை கலந்த திரில்லர் படங்களை எடுத்து பெரிய ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் அரண்மனை படத்தின் தொடர்ச்சியான பாகங்களை கொடுத்து பெரும் வெற்றியை பதிவு செய்தார் சுந்தர் சி. அடுத்ததாக அரண்மனை 5 திரைப்படத்திற்காகவும் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.