உஷாரா இருக்கனும்.. விஜய் பற்றிய பதிலுக்கு நெட்டிசன்களிடம் மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா
விஜய்:
விஜயை பற்றி பேசுகிறேன் என்ற பேர் வழியில் நெட்டிசன்களிடம் சிக்கி தற்போது ராஷ்மிகா மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தமிழ் சினிமாவில் மிகவும் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இவருடைய ரசிகர்களிடம் விஜயை பற்றி பேசும் போது கொஞ்சம் கவனமாகத்தான் பேச வேண்டும். இவருடைய படை பலம் என்னவென்று மாநாட்டிலேயே பார்த்திருப்போம்.
நடிகர்களில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகராக விஜய் இருக்கிறார். அடுத்தகட்டமாக அரசியலிலும் இறங்கியிருக்கிறார். இவரை எப்படியாவது அரசியலில் தலைவராக்க வேண்டும் என அவருடைய ரசிகர்களும் துடித்து வருகின்றனர். அந்தளவுக்கு சிறப்பான அரசியல் துவக்கத்தைத்தான் விஜயும் தந்திருக்கிறார். தற்போது விஜய் அவருடைய 69 வது படத்தில் நடித்து வருகிறார்.
தளபதி 69:
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போதுதான் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக பூஜா ஹெக்டே தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா விஜய் பற்றி பேசுகையில் தவறுதலாக கூற நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.
அதாவது ராஷ்மிகா முதன் முதலில் திரையில் பார்த்த நடிகர் விஜய்தானாம். கில்லி படத்தைத்தான் முதன் முதலில் பார்த்திருக்கிறார். அப்படி போடு பாடலுக்கு நிறைய முறை நடனமாடியிருக்கிறாராம். போக்கிரி படத்தின் ரீமேக்கான கில்லி படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என சோசியல் மீடியாவில் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் ராஷ்மிகா.
மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா:
இந்த ஒரு பதில்தான் நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளாகினார் ராஷ்மிகா. ஏனெனில் தெலுங்கில் ஒக்கடு படத்தின் ரீமேக் தான் கில்லி என்றும் போக்கிரி படத்தின் ரீமேக் போக்கிரிதான் என்றும் சொல்லி நெட்டிசன்கள் ராஷ்மிகாவை கிண்டலடித்தனர். உடனே ராஷ்மிகா ‘ஆமாம் . தெரியாமல் சொல்லிவிட்டேன். சொன்ன பிறகு யோசித்தேன். ஐயோ இது ரசிகர்கள் கேள்விகளை எழுப்புவார்களே என்றும் யோசித்தேன். அதனால் சாரி. தெரியாமல் சொல்லிவிட்டேன்’ என்று கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார் ராஷ்மிகா.