ரவிமோகன், ஆர்த்திக்கு செக் வைத்த ஐகோர்ட்... இனி எப்படி பேசுவாங்கன்னு பார்ப்போம்..!
ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியருக்கு இடையே விவாகரத்து வழக்கு போய்க் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சமூகவலை தளங்களில் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தனர். இதற்கிடையில் ரவிமோகனின் வருங்காலத் துணைவியார் கெனிஷாவும் தன் பங்கிற்கு சில கருத்துகளைச் சொன்னார்.
இதை விமர்சகர்கள் பலரும் தங்களுக்குத் தீனி போட்ட விஷயமாக நினைத்து ஆளாளுக்கு விமர்சிக்க ஆரம்பித்தனர். பொதுவாக பொதுவெளியில் சொந்த விஷயங்களைப் பற்றி பேசுவதே தவறு. அதிலும் ரவிமோகன் மீது தான் தவறு. அவர் பேசாமல் இருந்து இருந்தால் விஷயம் இந்தளவு பூதாகரமாகி இருக்காது என்றும் சில விமர்சகர்கள் பேச ஆரம்பித்தனர்.
ரவிமோகன் தனது வருங்காலத் துணைவி கெனிஷா என அறிவித்ததும் ஆர்த்தி தன் குழந்தைகளைப் பாதுகாப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தாரே என் கணவர். அது என்ன ஆனது என்று பதில் அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு தனக்கு மாதம் 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என்றும் கோரி இருந்தார். அந்த வழக்கு ஜூன் மாதத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சென்னை ஐகோர்ட் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி பொதுவெளியில் அவதூறான கருத்துகளைப் பரப்புவதை ரவிமோகன், ஆர்த்தி தம்பதியினர் தவிர்க்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.
மாறி மாறி இருவரும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தபோது ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி தனக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாணைக்கு வந்தது. அதில் ரவிமோகன், ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் இரு தரப்பினரும் எந்த அவதூறு கருத்துகளையும் இனி தெரிவிக்க மாட்டோம். இதுவரை பதிவு செய்தவற்றையும் நீக்குகிறோம் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.