ஆல் ஏரியாவிலும் துண்ட போட்டாச்சு. பேன் இந்திய நடிகரா மாறும் சூர்யா.. அடுத்த பட இயக்குனர் இவர்தான்

By :  Rohini
Update: 2025-02-05 15:09 GMT

கங்குவா தாக்கம்: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் யாரும் எதிர்பார்க்காத தோல்வியை சந்தித்தது. படம் ரிலீஸாகும் வரை படத்தை பற்றி யாருமே ஒரு நெகட்டிவ் கமெண்ட் கூட சொல்லவில்லை. அந்தளவுக்கு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில்தான் இருந்தார்கள்.

ரெட்ரோ : இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் , இயக்குனர் என படத்தை பெருமையாக கூறினார்கள். ஆனால் படம் சூப்பர் ப்ளாப் ஆனதுதான் மிச்சம். அதனால் அடுத்த படத்தை வெற்றிப்படமாகத்தான் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சூர்யா இருந்து வருகிறார். ஏற்கனவே கார்த்திக் சூப்பாராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

மீண்டும் த்ரிஷா: அந்தப் படம் மே 1 ஆம் தேதி ரிலீஸாகலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கு அடுத்த படியாக ஆர் .ஜே. பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். ஏற்கனவே மௌனம் பேசியதே படத்தின் மூலம் முதன் முதலில் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

பராசக்தி காட்டிய ஆட்டம்: ஒரு பெரிய வெற்றியை சூர்யா கொடுத்து நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது. அதனால் கோடம்பாக்கமும் சூர்யாவின் வெற்றியைத்தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் கூட சுதா கொங்கரா- சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகும் பராசக்தி படத்தின் டீசர் வெளியாகி பெரிய கூஸ் பம்பை ஏற்படுத்தியது. அந்த டீசரை பார்த்தும் ரசிகர்கள் ச்ச.. சூர்யா இந்தப் படத்தை மிஸ் பண்ணிவிட்டாரே என்றுதான் வருத்தப்பட்டனர்.

ஒரு வேளை சுதா கொங்கராவுடன் சூர்யா இணைந்திருந்தால் ஒரு சரியான கம்பேக்காக இருந்திருக்கும் . இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த ப்ராஜக்ட் பற்றித்தான் இப்போது செய்தி கிடைத்துள்ளது. ஏற்கனவே மலையாள இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் ஒரு படத்தில் சூர்யா நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் சூர்யா இணைய போகிறார் என்றும் ஒரு பேச்சு அடிபடுகிறது.


தெலுங்கில் கார்த்திகேயா என்ற படத்தை இயக்கிய சந்தோ மொண்டேட்டிதான் சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ணப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. கார்த்திகேயா படம் இரண்டு பாகங்களாக வெளியாகி வெற்றிப்பெற்றவை. அந்த இயக்குனருடன் தான் சூர்யா இணையப்போகிறார் என்று சொல்கிறார்கள் . ஒரு பக்கம் தெலுங்கு இயக்குனர் இன்னொரு பக்கம் மலையாள இயக்குனர், தமிழ் இயக்குனர் என ஒரு உண்மையான பேன் இந்திய நடிகராக மாறியிருக்கிறார் சூர்யார். ஆனால் வெறும் அறிவிப்புடனேயேதான் இருக்கின்றதே தவிர அடுத்த கட்டத்திற்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News