காதல் சொட்ட சொட்ட வெளியானது ‘விடாமுயற்சி’ படத்தின் மூன்றாவது சிங்கிள்..

By :  Rohini
Update: 2025-02-05 14:27 GMT

விடாமுயற்சி: அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ஆரவ், ரெஜினா ,அர்ஜுன் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது .

சூப்பர் ஜோடி: இரண்டு வருடங்கள் கழித்து அஜித்தின் படம் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்னொரு பக்கம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித்தும் த்ரிஷாவும் ஐந்தாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்து நடித்திருக்கின்றனர். ஏற்கனவே இவர்கள் நடித்த நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த ஒரு எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது .

முதல் நாள் வசூல்: ஆக மொத்தம் நாளை உலகெங்கிலும் இந்த படம் ரிலீசாக இருக்கின்றது. ரிலீசுக்கு முன்பாகவே படம் டிக்கெட் முன்பதிவில் 25 கோடிக்கு மேலாக வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் முதல் நாள் வசூல் யாரும் எதிர்பார்க்காத ஒரு வசூலை இந்த படம் நிச்சயமாக பெறும் என கோடம்பாக்கத்தில் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி அதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறது .


கவனத்தை ஈர்த்த டிரெய்லர்: டிரெய்லரும் வெளியாகி ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஏற்கனவே இந்த படம் ஹாலிவுட் படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்ற ஒரு பேச்சும் அடிபட்டு கொண்டு இருக்கின்றது .அதனால் டிரைலரை பார்த்த சில பேர் அந்த படத்தின் ரீமேக் தான் என கூறி வருகிறார்கள். இந்த நிலையில் படத்தின் மூன்றாவது பாடல் இப்போது வெளியாகியிருக்கிறது.

மோகன் ராஜா வரிகளில் அனிருத் குரலில் பாடல் வெளியாகி இருக்கின்றது .தனியே தள்ளிப்போ என தொடங்கும் இந்த பாடல் முழுக்க முழுக்க ஒரு ரொமாண்டிக் பாடலாகவே இருக்கிறது .பாடல் வரிகளை கேட்கும் பொழுது திரிஷாவை பிரிந்து அஜித் அவரை நினைத்து உருகி பாடும் பாடலாக தெரிகிறது .படத்தின் கதைப்படி த்ரிஷாவை ஒரு கும்பல் கடத்திக்கொண்டு போய் வைக்க அவரை தேடும்போது வரும் பிரச்சனைகள் தான் இந்த படம். அதனால் அந்த நேரத்தில் பாடும் பாடலாக இந்த பாடல் இருக்கும் என இந்தப் பாடல் வரிகளை பார்த்தாலே தெரிகிறது.


Full View


Tags:    

Similar News