ஜிவி - சைந்தவி பிரிவுக்கு பிறகு குழந்தையோட நிலைமையை பாருங்க? கஷ்டம்தான்

By :  Rohini
Update:2025-02-19 20:30 IST

ஜிவி பிரகாஷ்: இளையராஜா, ஏஆர் ரஹ்மான் இவர்கள் வரிசையில் இசையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் ஜிவி பிரகாஷ். ஏஆர் ரஹ்மானுக்கு உறவுக்காரர்தான் ஜிவி. அதனால் அந்த ஒரு ஜெனிட்டிக் இருக்கத்தான் செய்யும். இவரும் தன்னுடைய இசையால் இன்று பல பேர் நெஞ்சங்களில் குடி போயிருக்கிறார். ஜிவியின் இசையில் ஒரு தனி ரசனை இருக்கும். காதல் இருக்கும். எமோஷனல் இருக்கும். அது ஒருவித உணர்வு.

ஆல்பம் ஹிட்: அசுரன், கிரீடம், ஆயிரத்தில் ஒருவன், தெறி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம்தான் இவரது இசையை அடுத்தக்கட்ட இடத்திற்கு கொண்டு சென்றது. சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படமும் பெரிய அளவில் ஹிட்டானது. கண்டெண்ட் ஒரு பக்கம் இருந்தாலும் இவரது இசையில் அமைந்த பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்.

காதல் திருமணம்: இவர் பாடகி சைந்தவியை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பிரிவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவரும் சிறுவயது நண்பர்கள். அந்த ஒரு புரிதலில்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களுக்கு அப்படி என்ன சண்டை என்பதுதான் பலரின் கேள்வியாக இருந்தது.

பிரச்சினை இதுதான்: ஆனால் சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே ஜிவிக்கும் சைந்தவிக்கும் இடையே பிரச்சினை ஆரம்பமானது என சொல்லப்பட்டது. ஹீரோயின்களுடன் நெருக்கமாக நடிப்பது என சைந்தவிக்கு பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. அதன் காரணமாகவே இருவரும் பிரிந்தனர் என செய்தி வெளியானது. இந்த நிலையில் இவர்களுக்கு சிறுவயது மகள் இருக்கிறார்.


பிரிவுக்கு பிறகு சனி ஞாயிறு கிழமைகளில் ஜிவியுடனும் மற்ற நாள்களில் சைந்தவியுடனும்தான் மகள் இருக்கிறாராம். இதை ஒரு பேட்டியில் ஜிவி கூறினார். மேலும் நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம். எங்களுடைய உணர்வுகளையும் சுதந்திரத்தையும் மதிக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் சிறுவயது நண்பர்கள். அது என்றைக்கும் மாறாது. எப்போதும் போலத்தான் இருப்போம் என ஜிவி கூறியிருக்கிறார். 

Tags:    

Similar News