வொர்க் ஃபிரம் ஹோம் வேலை பார்க்குற ஒரே அரசியல் தலைவர் விஜய்தான்! இதுக்கு கூட டைம் இல்லையா?

By :  Rohini
Update: 2024-12-24 10:33 GMT

vjiayperiyar

விஜய்: 

இன்று பெரியாரின் நினைவு தினம். பல அரசியல் தலைவர்கள் அவருடைய நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய படங்களை எல்லாம் பார்க்க முடிகிறது. இதில் முற்றிலும் மாறாக விஜய் அவருடைய வீட்டிலேயே பெரியார் புகைப்படத்தை வைத்து அவருடைய உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் புகைப்படத்தை இன்று வெளியிட்டு இருக்கிறார்.


இதைப் பற்றி ஒரு பிரபல பத்திரிக்கையாளர் கடுமையாக விமர்சித்த ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. அவர் கூறியது இதோ. கொரோனா காலத்தில் அனைவருமே வீட்டிலிருந்தே வேலை பார்த்தார்கள். அதைப்போல வீட்டிலிருந்தே ஒர்க் ப்ரம் ஹோம் வேலை பார்க்கிற ஒரே அரசியல் தலைவர் விஜய் தான் என விமர்சித்து இருக்கிறார் அந்த பத்திரிகையாளர்.

வொர்க் ஃபிரம்ஹோம்:

ஏனெனில் வெள்ளம் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் ,கள்ளக்குறிச்சி மாவட்டம், விழுப்புரம் மாவட்ட மக்களை அங்கு போய் சந்திக்க வேண்டிய விஜய் பாதிக்கப்பட்டவர்களை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளையும் நிவாரண பொருட்களையும் வழங்கி இருக்கிறார். இது ஒர்க் ப்ரம் ஹோம் மாதிரியேயான ஒரு செயலாகும் .

இன்று பெரியாருடைய நினைவு நாள். அவருடைய நினைவு நாளுக்கு வீட்டில் அவருடைய படத்திற்கு மாலை போடுகிறார். ஆனால் அவருடைய பிறந்தநாளுக்கு நேராக பூந்தமல்லி போய்விட்டார் விஜய். அங்கு போய் மாலை எல்லாம் அணிவித்து கௌரவப்படுத்தினார். இப்போ ஏன் வீட்டிலேயே போடுகிறார் என்றால் அதற்கு ஒரு காரணத்தை சொல்றாங்க. கூட்டம் கூடிடும் என்று.

கூட்டம் கூடிடுமா?

அனிதா நீட் தேர்வில் உயிரிழந்த போது அங்கு விஜய் உட்கார்ந்து நீலக்கண்ணீர் வடித்தார். அப்போ கூட்டம் கூடல. ஸ்டெர்லைட் விவாகரத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் இறந்தார்கள். அப்போ போய் அவங்கள சந்திச்சாரு. அப்பொழுதும் கூட்டம் கூடவில்லை. இப்போது சமீபத்தில் கள்ளச்சாராயம் பிரச்சனையில் ஒரு 60 பேர் பாதிப்படைந்தார்கள். அப்பொழுதும் போய் சந்திச்சாரு. அப்பொழுதும் கூட்டம் கூடல.


ஆனால் இப்போ கூட்டம் கூடிடுமாம். தரையில் இருப்பவர்கள் திரையில் வந்தால் திரையில் உள்ளவர்கள் நாட்டை ஆளலாம் என ஒட்டுமொத்த இந்தியாவிற்குமே பறைசாற்றிய எம்ஜிஆரின் நினைவு நாள் இன்று. அதற்கு விஜய் என்ன செய்தார்? மற்ற அரசியல்வாதிகளை விட எம்ஜிஆர்ருக்கும் விஜய்க்கும் நிறைய பொருத்தங்கள் இருக்கிறது. ஏனெனில் இரண்டு பேருமே திரையுலகை சேர்ந்தவர்கள் தான்.

ஆனால் எம்ஜிஆருக்கு விஜய் மாலை போட மாட்டார். ஏனெனில் எம்ஜிஆர் மாதிரி மாற வேண்டும் என்றால் அது விஜயால் முடியாது. ஏனெனில் எம்ஜிஆர் தனக்கு இருந்த எல்லா சொத்துக்களையும் மக்களுக்கு எழுதி கொடுத்துவிட்டு தான் அரசியலுக்கு வந்தார். இதையெல்லாம் செய்யாத விஜய் தனது சொந்த காரணங்கள் என்றால் ஃபிளைட் ஏறி போக மட்டும் தெரியும் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். 

Tags:    

Similar News