லியோ ரிலீசுக்கு அழைக்கப்பட்ட முன்னணி நடிகர்கள்… ஆப்பை நாங்களே வச்சிக்குவோம? போங்கப்பபா!
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு சில முன்னணி நடிகர்கள் அழைக்கப்படும் அவர்கள் மறுத்ததாக ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சில சுவாரஸ்ய விஷயமும் வெளிச்சமாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் லியோ. விக்ரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை விஜய் கூட பெரிய அளவில் நம்பி இருக்கிறார். […]
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சிக்கு சில முன்னணி நடிகர்கள் அழைக்கப்படும் அவர்கள் மறுத்ததாக ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து சில சுவாரஸ்ய விஷயமும் வெளிச்சமாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் லியோ. விக்ரம் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினை விஜய் கூட பெரிய அளவில் நம்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!
த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளங்களே இந்த படத்தில் நடித்துள்ளனர். முக்கியமாக நடிகர் கமல்ஹாசன் விக்ரம் கெட்டப்பில் ஒரு பத்து நிமிட காட்சியில் எண்ட்ரி கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதை பலரும் அமோதித்துஇருக்கும் நிலையில் ரசிகர்கள் இப்போதே வைப் செய்ய தொடங்கி விட்டனர்.
இந்த நிகழ்ச்சியின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய தொல்லையை படக்குழுவிற்கு கொடுத்தது. தென் தமிழகத்தில் நடத்தலாம் என பலரும் விஜயிடம் கோரிக்கை வைக்க வேண்டாம். அது எனக்கு பெரிய சிக்கலை கொடுக்கும். ரசிகர்கள் அரசாங்கத்தினை சீண்டும் வாசகங்களை பேசி விட்டால் அவர்களை கோபிக்க முடியாது.
இதையும் படிங்க: விஜயை தொடர்ச்சியாக இயக்க காத்திருக்கும் டாப் இயக்குனர்கள்.. அப்போ அரசியல் எண்ட்ரி அம்போவா! என்னப்பா இது!
லியோ படத்திற்கு சிக்கல் என் அரசியல் வருகையும் பாதிக்கப்படும் என்பது விஜயின் எண்ணமாக இருக்கிறது. மலேசியா தான் என சிலர் சொல்ல அங்கும் இவர்கள் எதிர்பார்த்த அரங்கில் புக் செய்யப்பட்டு விட மீண்டும் சென்னை பக்கமே திரும்பி இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி செப்டம்பர் 30 அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நிகழ்ச்சிக்கு கமல் வரலாம் என்று கூறப்படுகிறது. ஒருபக்கம் லோகேஷ் மறுபக்கம் அவரின் விருப்பமான நடிகர் விஜய் என்பதால் உலகநாயகன் எண்ட்ரி கண்டிப்பாக இருக்கும் என்கிறார்கள். இதில் விக்ரம், தனுஷிடம் படக்குழு அழைப்பு விடுக்க அவர்கள் தரப்பு மறுத்ததாக ஒரு தகவல்கள் உலா வருகிறது. விஜய் நிகழ்ச்சிக்கு செல்ல அது அஜித் ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாரிக்குமோ என்ற பயமாக இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.