லியோ படம் ப்ளாப் ஆகணும்.. இல்ல விஜயிக்கு தான் கஷ்டம்… என்னங்க தலைகீழா சொல்றீங்க!
Vijay Leo: விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் 1000 கோடி வரை வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த படம் கண்டிப்பாக ப்ளாப் தான் ஆக வேண்டும் என ஜோசியர் ஒருவர் சொல்லி இருக்கும் தகவலால் விஜய் ரசிகர்களே கொஞ்சம் ஜர்காகி இருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் லியோ. இப்படம் வரும் ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி ரிலீஸாக இருக்கிறது. ஜெய்லர் படம் வசூலை அடித்து துவைக்க […]
Vijay Leo: விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் 1000 கோடி வரை வசூல் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அந்த படம் கண்டிப்பாக ப்ளாப் தான் ஆக வேண்டும் என ஜோசியர் ஒருவர் சொல்லி இருக்கும் தகவலால் விஜய் ரசிகர்களே கொஞ்சம் ஜர்காகி இருக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் லியோ. இப்படம் வரும் ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி ரிலீஸாக இருக்கிறது. ஜெய்லர் படம் வசூலை அடித்து துவைக்க இப்படம் 1000 கோடியாவது வசூல் படைக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
இந்நிலையில் ஜோசியர் ஒருவர் பேசி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், விஜயிற்கு தற்போது அஷ்டமந்த சனி நடந்து வருகிறது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது, விஜய் கடக ராசியை சேர்ந்தவர். அவருக்கு இந்த லியோ படம் சரியாக போகாது.
நிறைய அவமானம் சேரும். கஷ்ட காலத்தில் பெரிய ஆபத்து நடப்பதை சின்ன ஆபத்து நடந்து விடுவது நல்லது. விஜயை காக்காவாக சித்தரிப்பது தான் நல்லது. அதை விட்டு பெரிய விபத்து ஏற்பட்டு முதுகுதண்டில் எதுவும் அடிப்பட்டால் அது இன்னும் கஷ்டமாகி விடும் தானே.
விஜய் ரஜினியை போல அரசியலை தன்னுடைய படங்களுக்கு ப்ரோமோஷனாக பயன்படுத்தலாம். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தானே தெரியும். விஜயிற்கு ஆசை இருக்க மாதிரியே தெரியவில்லை. வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர் தான் விஜய்.
இதையும் படிங்க: என் வீட்ல வந்து டான்ஸ் கேக்குதா உனக்கு!.. கடுப்பில் நாயை அவிழ்த்து விட்ட அட்லீ.. அலறிய கீர்த்தி சுரேஷ்!..
விஜய் உழைத்த உழைப்பே அவரை வளர வைக்கும். எதுவும் நடுவில் கோமாளித்தனம் செய்யாமல் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். ஆனால் ஜோசியரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட்களை தொடர்ந்து தட்டி வருகின்றனர். லியோ படம் வெற்றி பெறுமா? மொக்கை வாங்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த வீடியோவைக்காண: https://www.youtube.com/watch?v=MiBd8llStlM