என் வீட்ல வந்து டான்ஸ் கேக்குதா உனக்கு!.. கடுப்பில் நாயை அவிழ்த்து விட்ட அட்லீ.. அலறிய கீர்த்தி சுரேஷ்!..
ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடனமாடிய ஹய்யோடா பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இயக்குனர் அட்லி நைசாக உள்ளே புகுந்து தனது வளர்ப்பு நாயுடன் வாக்கிங் சென்றுக் கொண்டிருந்தார். நடனம் ஆடிக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் நாயை பார்த்ததும் கொஞ்சலாம் என கிட்டே செல்ல தீடிரென அந்த நாய் கீர்த்தி சுரேஷ் கையை பதம் பார்க்க ஒரே கத்தாக கத்தி அலறி விட்டார். கீர்த்தி சுரேஷ் அலறி அடித்துக் கொண்டு ஆட்டத்தை நிறுத்திய வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
இதுவரை இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்காத நிலையில், சமீப காலமாக தொடர்ந்து அட்லி மற்றும் பிரியா அட்லி உடன் அதிக நேரத்தை கீர்த்தி சுரேஷ் செலவிட்டு வருவது ஏன் என்கிற கேள்வி இயல்பாகவே ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.
ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை ஹிந்தியில் இயக்கிய அட்லி, அடுத்ததாக பாலிவுட்டில் தயாரிப்பாளர் அவதாரத்தையும் எடுக்க உள்ளார். பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிப்பில் தெறி படத்தின் ரீமேக்கை அட்லி தான் தயாரிக்கிறார்.
இதையும் படிங்க: அட்லீ வீட்டிலேயே ஐக்கியமாகிட்டாரா கீர்த்தி சுரேஷ்!.. எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!..
அந்த படத்தில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ், வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பிரியா அட்லியின் ஃபேமிலி ஃபிரண்டாகவே மாறிவிட்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடனமாடிய ஜவான் படத்தின் பாடலுக்கு நயன்தாராவை விட சிறப்பான நடனத்தை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய வீடியோவை ஆசை ஆசையாய் வெளியிடலாம் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அட்லி மற்றும் அவரது நாய் பண்ண சேட்டையால் அலறல் வீடியோவாக தற்போது அது மாறியுள்ளது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..
https://www.instagram.com/reel/CxIf4rfpEL5/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==
COPYRIGHT 2024
Powered By Blinkcms