லியோ வெற்றி விழா எந்த டிவியில் எப்போ போடுறாங்க தெரியுமா?.. வேறலெவல் கொண்டாட்டத்துக்கு ரெடியாகுங்க!..
லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் பேசிய பேச்சு குறித்த தகவல்களும் மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் இணையத்தில் கசிந்து பெரும் விவாதத்தை சமூக வலைத்தளத்தில் கிளப்பியுள்ளது. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக லியோ திரைப்படத்தின் வெற்றி விழா ஒளிபரப்பு செய்யப்படுமா என்கிற கேள்விக்கு அதற்கு முன்னதாகவே லியோ படத்தின் வெற்றி விழாவை சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையும் படிங்க: விஜய் சக்சஸ் மீட்டில் அஜித் பற்றிய கேள்வி!. கடுப்பான […]
லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் பேசிய பேச்சு குறித்த தகவல்களும் மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோக்களும் இணையத்தில் கசிந்து பெரும் விவாதத்தை சமூக வலைத்தளத்தில் கிளப்பியுள்ளது.
தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக லியோ திரைப்படத்தின் வெற்றி விழா ஒளிபரப்பு செய்யப்படுமா என்கிற கேள்விக்கு அதற்கு முன்னதாகவே லியோ படத்தின் வெற்றி விழாவை சன் டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் சக்சஸ் மீட்டில் அஜித் பற்றிய கேள்வி!. கடுப்பான பிரபலம்!. கொஞ்சம் சும்மா இருங்கப்பா!..
தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய்யின் புதிய படங்களின் இசை வெளியீட்டு விழா மற்றும் பேட்டிகள் என அனைத்தும் சன் டிவியில் தான் ஒளிபரப்பாகி வருகின்றன. சாட்டிலைட் பார்ட்னர் ஆகவும் சன் டிவி உள்ள நிலையில் லியோ படத்தின் வெற்றிவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 5-ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக புதிய புரோமோ வீடியோவை சன் டிவி தற்போது வெளியிட்டுள்ளது.
மொபைல் வீடியோவில் வெளியான காட்சிகளை விட லியோ வெற்றி விழா நிகழ்ச்சியை காணத்தான் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ள நிலையில், விரைவில் சன் டிவியில் சூட்டோடு சூட்டாக லியோ வெற்றி விழாவை இந்த வாரமே ஒளிபரப்ப உள்ளனர்.
இதையும் படிங்க: மேக்கப் போட்டதும் நம்பியாரை முறைத்த சிவாஜி!.. அட கேரக்ட்ரா மாறுவதுன்னா இதுதான் போல!..
அடுத்த வாரம் வெளியிட்டால் வசூல் நிலவரம் மேலும், மோசமடைந்தால் எப்படி போட முடியும் என ரஜினி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், ரத்னகுமார் பேசியதும், நடிகர் விஜய் காக்கா - கழுகு என சொல்லி விட்டு நக்கலாக சிரித்த காட்சிகள் எல்லாம் சன் டிவி எடிட்டில் தூக்கி விடுவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.