இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர்!.. தமிழ்நாட்டில் அதிக வசூலே லியோ தானாம்!.. தீபாவளிக்கு செம ட்ரீட்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 25வது நாள் வெற்றி விழாவை தீபாவளியான இன்று கொண்டாடி வருகிறது. வார நாட்களில் தியேட்டர்களில் காத்து வாங்கி வந்த நிலையிலும், வார இறுதி நாட்களில் திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. தீபாவளி ரிலீஸாக வெளியான ஜப்பான் மற்றும் ரெய்டு ரசிகர்களை ஈர்க்காத நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் லியோ படங்களை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் தியேட்டருக்கு சென்று […]

By :  Saranya M
Update: 2023-11-12 21:00 GMT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 25வது நாள் வெற்றி விழாவை தீபாவளியான இன்று கொண்டாடி வருகிறது. வார நாட்களில் தியேட்டர்களில் காத்து வாங்கி வந்த நிலையிலும், வார இறுதி நாட்களில் திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.

தீபாவளி ரிலீஸாக வெளியான ஜப்பான் மற்றும் ரெய்டு ரசிகர்களை ஈர்க்காத நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் லியோ படங்களை பார்க்க மக்கள் ஆர்வத்துடன் தியேட்டருக்கு சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க: நாடக குழுவையே வியக்க வைத்த உலகநாயகன்… ஆண்டவர் பிஞ்சிலேயே பழுத்தவர்தான் போல…

லியோ படத்தின் வசூல் அறிவிப்பை 540 கோடிக்கு மேல் அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் வெளியிடாத நிலையில், தீபாவளி அதுவுமாக விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் ரஜினி ரசிகர்களை கடுப்பேற்றவும் இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர் லியோ தான் என்றும் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்களின் முதல் வரிசையில் லியோ இடம் பிடித்து விட்டது என்றும் 100 கோடி ஷேரை தமிழ்நாட்டில் லியோ பெற்றுள்ளது என்றும் இலங்கை, இங்கிலாந்து, கேரளா உள்ளிட்ட இடங்களில் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படம் லியோ தான் என்றும் அதிரடியாக அறிவித்துள்ளனர்.

600 கோடி வசூலை தாண்டி லியோ இந்த வாரம் சென்று இருக்கும் என்றும் நாளை அல்லது நாளை மறுநாள் இன்னொரு வசூல் அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என தெரிகிறது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு போடுற போஸ்ட்டா இது சமந்தா!.. பாத் டப்பில் அப்படியொரு போஸ்.. ஆடிப்போன இணையம்!..

கடந்த ஆண்டு விக்ரம் படத்தை பின்னுக்குத்தள்ளி பொன்னியின் செல்வன் வசூலில் முதலிடத்தை பிடித்த நிலையில், இந்த ஆண்டு ஜெயிலரை சற்றே பின்னுக்குத்தள்ளி லியோ முதலிடத்தை பிடித்துள்ளது.

Tags:    

Similar News