இனிமே படங்களே வேணாம்!.. கடையை மூடும் லைக்கா!... சொந்த ஊருக்கே போகும் சுபாஷ்கரன்!..

சினிமா துவங்கிய காலத்தில் தனி நபர்களே சினிமாவை தயாரிக்கும் தயாரிப்பாளராக இருந்தனர். பல வருடங்கள் திரையுலகில் திரைப்படங்களை தயாரித்து வந்தது தனி நபர்கள் அல்லது தனி நபர்களின் நிறுவனங்கள்தான். ஜெமினி பிக்சர்ஸ், ஜுபிடர் பிக்சர்ஸ், ஏவிஎம் என எல்லா நிறுவனங்களையும் தனி நபர்கள்தான் வழிநடத்தி வந்தனர். ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் நுழைந்தன. இதில், லைக்கா நிறுவனம் முக்கியமான ஒன்றாகும். இலங்கை தமிழரான சுபாஷ்கரான் லண்டனில் பெரிய தொழிலதிபர். இலங்கையிலும், லண்டனிலும் […]

Update: 2024-06-18 07:00 GMT

சினிமா துவங்கிய காலத்தில் தனி நபர்களே சினிமாவை தயாரிக்கும் தயாரிப்பாளராக இருந்தனர். பல வருடங்கள் திரையுலகில் திரைப்படங்களை தயாரித்து வந்தது தனி நபர்கள் அல்லது தனி நபர்களின் நிறுவனங்கள்தான். ஜெமினி பிக்சர்ஸ், ஜுபிடர் பிக்சர்ஸ், ஏவிஎம் என எல்லா நிறுவனங்களையும் தனி நபர்கள்தான் வழிநடத்தி வந்தனர்.

ஆனால், 10 வருடங்களுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் நுழைந்தன. இதில், லைக்கா நிறுவனம் முக்கியமான ஒன்றாகும். இலங்கை தமிழரான சுபாஷ்கரான் லண்டனில் பெரிய தொழிலதிபர். இலங்கையிலும், லண்டனிலும் அவருக்கு பல தொழில்கள் உண்டு. தமிழ் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தில் சென்னையில் ஒரு அலுவலகம் துவங்கி முதலீடு செய்தார்.

ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களை வளைத்து போட்டு அவர்களுக்கு பல கோடிகளை சம்பளமாக கொடுத்தது இந்நிறுவனம். முதல் படமே விஜயை வைத்து கத்தி படத்தை துவங்கியது லைக்கா நிறுவனம். ஒருபக்கம் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் சினிமா எடுக்க துவங்கியது.

கேட்ட சம்பளத்தை விட பல கோடிகள் கொடுக்க தயாராக இருந்ததால் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுத்தானர். ஏனெனில் இவர்கள் கேட்கும் 100 கோடி சம்பளத்தை தனி நபர் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியாது என்பது முக்கிய காரணம்.

கமலை வைத்து இந்தியன் 2, ரஜினியை வைத்து வேட்டையன், அஜித்தை வைத்து விடாமுயற்சி என முக்கிய படங்களை தயாரித்து வருகிறது லைக்கா. ஆனால், சமீபகாலமாக லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கூட பல நாட்கள் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில், இப்போது தயாரித்து கொண்டிருக்கும் படங்களை மட்டும் ரிலீஸ் செய்துவிட்டு சினிமா தயாரிக்கும் தொழிலில் இருந்தே விலகி விட லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

Tags:    

Similar News