6 ஃபிளாப்புக்கு பிறகு விஷாலுக்கு வெற்றி கிடைத்ததா?.. மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் எவ்வளவு?

இரும்புத்திரை படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்த அனைத்து படங்களுமே படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில் எனிமி திரைப்படம் மட்டும் சற்றே காப்பாற்றியது. ஆனால் அதற்கு பின்னர் வெளியான லத்தி திரைப்படமும் விஷாலுக்கு வெற்றியை தரவில்லை. சண்டக்கோழி 2, அயோக்கியா, ஆக்சன், சக்ரா, வீரமே வாகை சூடும், லத்தி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெறாமல் போன நிலையில் தொடர்ந்து போராடி எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் […]

By :  Saranya M
Update: 2023-09-15 21:00 GMT

இரும்புத்திரை படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்த அனைத்து படங்களுமே படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில் எனிமி திரைப்படம் மட்டும் சற்றே காப்பாற்றியது. ஆனால் அதற்கு பின்னர் வெளியான லத்தி திரைப்படமும் விஷாலுக்கு வெற்றியை தரவில்லை.

சண்டக்கோழி 2, அயோக்கியா, ஆக்சன், சக்ரா, வீரமே வாகை சூடும், லத்தி உள்ளிட்ட படங்கள் வெற்றி பெறாமல் போன நிலையில் தொடர்ந்து போராடி எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என நினைத்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அத்தனை அப்டேட் கொடுத்தது உன் கண்ணுக்கு தெரிலல!.. பூட்டி வச்சு பூஜை பண்ணு.. தெறிக்கவிட்ட விஜய் ஃபேன்ஸ்!..

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் படத்தின் டிரைலருக்கு பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றது. அதை நம்பி முதல் நாள் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை ஏமாற்றாமல் செம்ம என்டர்டைன்மென்ட் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த டெலிபோன் டைம் டிராவல் திரைப்படம் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யாவின் வெறித்தனமான நடிப்பு காரணமாக பாராட்டுக்களை அள்ளி வருகிறது. சில 18+ வசனங்கள் இருந்தாலும், அனகோண்டா மேட்டர் இருந்தாலும் அனைவரும் பார்க்கும்படியான படமாகவே மார்க் ஆண்டனி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இப்படியொரு காமெடி வில்லனை பார்த்திருக்கவே மாட்டீங்க!.. மாஸ் காட்டியதா மார்க் ஆண்டனி?.. விமர்சனம் இதோ!..

விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் முதல் நாளில் சுமார் ஏழு கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெறும் என மார்க் ஆண்டனி படக்குழு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. சந்திரமுகி 2 திரைப்படம் போட்டியிலிருந்து விலகிய நிலையில் வேறு எந்த ஒரு பெரிய படமும் போட்டியில் இல்லாததால் விஷாலுக்கு இந்த முறை வெற்றி கிடைப்பது நிச்சயம் என்கின்றனர்.

Tags:    

Similar News