‘பேய காணோம்’ படப்பிடிப்பில் மீராமிதுன காணோம்!.. கதறும் இயக்குனர்...
எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தர் மீராமிதுன். அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றாலும் தன்னை பிரபலமாக அவரே நினைத்து கொள்வார். அழகிப்போட்டிகளில் மோசடி செய்ததாக புகாரில் சிக்கினார். பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது பாலியல் புகார் கூறி பின் அசிங்கப்பட்டார். தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே தன்னை அழைத்துக்கொள்வார். வாய்க்கொழுப்பு காரணமாக இவர் கூறிய கருத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சில நாட்கள் சிறையில் இருந்து பின் ஜாமின் பெற்று வெளியில் […]
எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தர் மீராமிதுன். அவரை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்றாலும் தன்னை பிரபலமாக அவரே நினைத்து கொள்வார். அழகிப்போட்டிகளில் மோசடி செய்ததாக புகாரில் சிக்கினார். பிக்பாஸ் வீட்டில் சேரன் மீது பாலியல் புகார் கூறி பின் அசிங்கப்பட்டார். தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே தன்னை அழைத்துக்கொள்வார்.
வாய்க்கொழுப்பு காரணமாக இவர் கூறிய கருத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சில நாட்கள் சிறையில் இருந்து பின் ஜாமின் பெற்று வெளியில் வந்தார். சிறையில் செல்வதற்கு முன்பே ‘பேய காணோம்’ என்கிற படத்தில் அவர் நடித்து வந்தார். சிறையில் இருந்து விடுதலை ஆன பின் இப்படத்தில் அவர் நடித்து வந்தார்.
இந்நிலையில், திடீரென படப்பிடிப்பிலிருந்து அவர் காணாமல் போய்விட்டார். இதுபற்றி கருத்து தெரிவித்த அப்படத்தின் இயக்குனர் செல்வ அன்பரசன் ‘இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.
இன்னும் 2 நாட்களில் படப்பிடிப்பு முடியவுள்ள நிலையில் மீராமிதுனையும், அவரின் உதவியாளர்கள் 6 பேரையும் காணவில்லை. உடமைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் ஓடிவிட்டனர். பேய காணோம் படம் எடுக்க வந்து தற்போது கதாநாயகியை தேடி வருகிறோம். எங்களின் உழைப்பை மதிக்காமல் மாயமான மீராமிதுன் மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கவுள்ளோம்’என தெரிவித்துள்ளார்.
சிறையில் இருந்த போது தான் படம் நடிக்க வேண்டியுள்ளது. எனக்கு ஜாமின் கொடுங்கள் என நீதிமன்றத்தில் கதறித்தான் ஜாமின் கேட்டார் மீராமிதுன். தற்போது படப்பிடிப்பில் இருந்து எஸ்கேப் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.