எம்.ஜி.ஆரை மீறி திருமணம் செய்து வைத்த ஜெயலலிதா!.. பொன்மன செம்மலுக்கு வந்த கோபம்!.

Mgr Jayalalitha: எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஜெயலலிதா. வெண்ணிற ஆடை என்கிற படத்தில் அறிமுகமான அவர் அடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். ஜெயலலிதாவை நடிகையாக செம்மைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்தான். அடிமைப்பெண் படத்தில் இரண்டு நடிகைகளுக்கு கொடுக்க வேண்டிய வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு கொடுத்து அவரை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்தார். அதன்பின் தான் நடித்த பல திரைப்படங்களிலும் ஜெயலலிதாவை நடிக்க வைத்தார். சந்திரோதயம், நம் நாடு, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், […]

Update: 2023-11-09 06:57 GMT

Mgr Jayalalitha: எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் ஜெயலலிதா. வெண்ணிற ஆடை என்கிற படத்தில் அறிமுகமான அவர் அடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். ஜெயலலிதாவை நடிகையாக செம்மைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர்தான்.

அடிமைப்பெண் படத்தில் இரண்டு நடிகைகளுக்கு கொடுக்க வேண்டிய வாய்ப்பை ஜெயலலிதாவுக்கு கொடுத்து அவரை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்தார். அதன்பின் தான் நடித்த பல திரைப்படங்களிலும் ஜெயலலிதாவை நடிக்க வைத்தார். சந்திரோதயம், நம் நாடு, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், குமரிக்கோட்டம், என் அண்ணன், தனிப்பிறவி, காவல்காரன், ராமன் தேடிய சீதை, நீரும் நெருப்பும் என பலப்படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் ஜெயலலிதா.

இதையும் படிங்க: நீங்கலாம் பெரிய நடிகர்.. கொஞ்சம் மனசு வைங்க ப்ளீஸ்!.. நாகேஷிடம் கெஞ்சிய எம்.ஜி.ஆர்..

அதேபோல், எம்.ஜி.ஆர் அரசியல் கட்சியை துவங்கி முதல்வரான பின் ஜெயலலிதாவை கட்சியிலும் இணைத்து அவருக்கு கொள்கைப்பரப்பு செயலாளர் பதவியும் கொடுத்தார். அதன்பின் அவரை பாராளுமன்ற உறுப்பினராகவும் மாற்றினார். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின் அதிமுகவை கைப்பற்றிய ஜெயலலிதா அந்த கட்சியை வழிநடத்தி தமிழக முதல்வராகவும் மாறினார்.

எம்.ஜி.ஆரின் உதவியால் வளர்ந்தாலும் நிறைய விஷயங்களில் ஜெயலலிதா தன் விருப்பப்படியே செயல்பட்டு வந்தார். இது எம்.ஜி.ஆருக்கு பிடிக்காது. ஆனாலும், ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவில்லை. ஒருகட்டத்தில் ஜெயலலிதாவை கழட்டிவிட்டு சரோஜாதேவியுடன் எம்.ஜி.ஆர் தொடர்ந்து நடித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை பாக்கனும்னா கண்டிப்பா இத பண்ணனுமாம்! இல்லனா நடக்குறதே வேற – பிரபலம் சொன்ன தகவல்

இதில் கோபமடைந்த ஜெயலலிதா சிவாஜி, ஜெய்சங்கர், முத்துராமன் என பலருடனும் நடிக்க துவங்கினார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், அவரால் ஜெயலலிதாவை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா தனது சகோதரர் ஜெயகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

எம்.ஜி.ஆர் திராவிட கொள்கைகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதல் அந்த திருமணத்தை சுயமரியாதை திருமணமாக நடத்த வேண்டும் என சொன்னார். ஆனால், ஜெ.விற்கு அதில் உடன்பாடு இல்லை. அண்ணனின் திருமணத்தை திருப்பதியில் தங்களின் குடும்ப முறைப்படியே செய்து வைத்தார். இதில் கோபமடைந்த எம்.ஜி.ஆர் அந்த திருமணத்திற்கு கூட செல்லவில்லை. அதனின் பல மாதங்கள் அவர் ஜெயலலிதாவிடம் பேசவும் இல்லையாம்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..

Tags:    

Similar News