இனி நீங்களும் ஆகலாம் நயன்தாரா!.. சினிமா புரமோஷனுக்கு நோ.. ஆனால், டிசைன் டிசைனா நடக்கும் வியாபாரம்!..
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சினிமாவில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம், டீக்கடை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பிசினஸ்களிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது 9 Skins எனும் நிறுவனத்தை புதிதாக ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னதாக முகத்தைக் கூட காட்டாமல், வெறும் முன்னழகை மட்டும் காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நயன்தாரா அதற்கான காரணத்தை தற்போது வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் நடிகைகள், மற்றும் பாலிவுட் நடிகைகள் சொந்தமாக அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்து கோடி கோடியாக சம்பாதித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சரிவா.. அதுவும் ஷாருக்கானுக்கா!.. ஜவான் திரைப்படத்தின் 7வது நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!..
அதே ரூட்டில் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிய நாமும் பயணிக்கலாம் என்கிற பலே திட்டத்தை போட்ட நயன்தாரா அதிரடியாக தற்போது இந்த புதிய பிசினஸில் தனது ஒட்டுமொத்த கவனத்தையும் செலுத்தியுள்ளார். வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி முதல் 9 Skins நிறுவன ஸ்கின் கேர் ப்ராடக்ட்கள் சந்தையில் விற்பனைக்கு வரப் போவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார் நடிகை நயன்தாரா. ஒரு பக்கம் சினிமாவில் உச்சம் தொட்டு வரும் நயன்தாரா, இன்னொரு பக்கம் பிசினஸில் பாஸ் லேடி ஆகவும் மாறி வருகிறார்.
இதையும் படிங்க: லவ் டுடே இந்தி ரீமேக்கில் கமிட்டான சாய் பல்லவி!.. ஹீரோ அந்த பிரபல நடிகரோட வாரிசா?..
9ஸ்கின்ஸ் எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த அழகு சாதன க்ரீமை வாங்கித் தடவினால், நாமும் நயன்தாரா போல மாறிவிடுவோமா என இளம் பெண்கள் நயன்தாராவின் ஸ்கின் கேர் லோஷனை வாங்கி பயன்படுத்துவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், பட புரமோஷன்களுக்கே வரமாட்டேன் என அடம் பிடித்து ஷாருக்கானின் ஜவான் பட புரமோஷனுக்கே செல்லாத நயன்தாரா தற்போது தனது கம்பெனி விளம்பர மாடலாக மாறி தாராள கவர்ச்சியால் இளைஞர்களை கவர்ந்து வருவதை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என கேள்விகள் எழுந்துள்ளன.