லவ் டுடே இந்தி ரீமேக்கில் கமிட்டான சாய் பல்லவி!.. ஹீரோ அந்த பிரபல நடிகரோட வாரிசா?..

ஊட்டியில் பிறந்து வளர்ந்த நடிகை சாய் பல்லவி மருத்துவப் படிப்பை படித்தாலும், அவரது மனம் சினிமா சினிமா என சொல்ல, உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனக் கலைஞராக கலந்துக் கொண்டு கலக்கிய சாய் பல்லவிக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், நிவின் பாலி நடித்த மலையாள படமான பிரேமம் படத்தில் கிடைத்த வாய்ப்பு அவருக்கு சரியான என்ட்ரியாக சினிமா துறையில் அமைந்தது.

நடிகை சாய் பல்லவி மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் நல்லா நடிக்கத் தெரிஞ்ச வெகு சில நடிகைகளில் டாப் நடிகையாகவும் வலம் வருகிறார்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா!.. கழுகுடன் கொஞ்சி விளையாடுறாரு.. அஜித்தை போல துப்பாக்கி சுடுறாரே!..

சிவகார்த்திகேயனின் ராணுவ கதையை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் படத்தில் ஹீரோயினாக காஷ்மீருக்கு சென்ற நிலையில், சாய் பல்லவியை அந்த பாலிவுட்டின் பெரிய நடிகரின் மகன் பார்த்து விட்டு ரொம்ப பிடித்து விட்டது என்கின்றனர்.

தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், அந்த படத்தின் ஹிந்தி ரீமேக் ரைட்ஸை பாலிவுட் நடிகர் அமீர்கான் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், தனது முதல் மனைவியின் மகன் ஜுனைத் கானை ஹீரோவாக்கும் முடிவில் அமீர்கான் அந்த படத்தை தயாரிக்க சுனில் பாண்டே எனும் பாலிவுட் இயக்குநர் அந்த படத்தை இயக்கவுள்ளார்.

இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?

அந்த படத்தில் தான் தற்போது நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக அறிமுகமாகப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

நானி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படத்திலும் சாய் பல்லவியின் நடிப்பை பார்த்து விட்டு பல பாலிவுட் பிரபலங்கள் நடிகை சாய் பல்லவியை அணுகிய நிலையில், அமீர்கானின் மகனுக்குத் தான் அந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்கின்றனர்.

 

Related Articles

Next Story