சரிவா.. அதுவும் ஷாருக்கானுக்கா!.. ஜவான் திரைப்படத்தின் 7வது நாள் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!..

0
283

Jawan Box Office: பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங் நான் மட்டும் தான் என்பதை இந்த ஆண்டு மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார் நடிகர் ஷாருக்கான். கோலிவுட் இயக்குனர் அட்லி முதன்முறையாக பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் திரைப்படத்தில் அதிகபட்சமாக ஹீரோயின், வில்லன், காமெடியன் என எல்லோருமே தமிழ் சினிமாவை சேர்ந்த நபர்கள் தான். ஏன் இசையமைப்பாளர் கூட நம்ம ஊர் அனிருத் தான்.

இப்படி ஒரு டீமை வைத்துக்கொண்டு பாலிவுட்டில் வசூல் வேட்டையை நடத்த தன்னால் முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் ஷாருக்கான்.

இதையும் படிங்க: ஜவானில் அம்மணி காட்டிய தாராளம்… நயனை வளைத்து போட தயாராகும் பாலிவுட் ஹீரோக்கள்!

வார நாட்களில் ஜவான் திரைப்படத்தின் வசூல் சரிவடையும் தொடங்கி வந்த நிலையில், ஷாருக்கானுக்கு சரிவா என்கிற ரீதியில் மீண்டும் பாக்ஸ் ஆபிஸை உயர்த்தி காட்டியிருக்கிறார் ஷாருக்கான்.

செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 13 வரை உலக அளவில் 660.03 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக புள்ளி விவரத்தோடு தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் சில்லீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: லவ் டுடே இந்தி ரீமேக்கில் கமிட்டான சாய் பல்லவி!.. ஹீரோ அந்த பிரபல நடிகரோட வாரிசா?..

மேலும், நாளை முதல் வார இறுதி நாட்கள் மீண்டும் தொடங்கும் நிலையில் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி விடுமுறை வேறு வருவதால், ஜவான் திரைப்படம் ஜெட் வேகத்தில் வசூல் வேட்டையை இரண்டாம் வாரத்திலும் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை எல்லாம் தூக்கி சாப்பிட்ட நிலையில், பதான் படத்தின் வசூலை முறியடிக்க அதிரடி காட்டி வருகிறது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்.

google news