
Cinema News
ஜவானில் அம்மணி காட்டிய தாராளம்… நயனை வளைத்து போட தயாராகும் பாலிவுட் ஹீரோக்கள்!
Jawan: ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தால் நயனுக்கு தற்போது கோலிவுட்டினை தாண்டி பாலிவுட்டை பக்கம் காத்து அதிகமாக அடிக்க தொடங்கி இருக்கிறது. இதனால் தற்போது நயனை வளைத்து போட பல பாலிவுட் நடிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தயாராகி வருகின்றனர்.
லேடி சூப்பர் ஸ்டார் எனச் செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா. கோலிவுட்டில் மாஸ் நாயகியாக வலம் வருகிறார். தனி நாயகியாக படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வரிசையாக ஹிட் கொடுத்தார். டாப் நாயகர்களின் படங்களை தொடர்ச்சியாக தவிர்த்து வந்தார்.
இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் பொண்ணுன்னா சும்மாவா!.. கழுகுடன் கொஞ்சி விளையாடுறாரு.. அஜித்தை போல துப்பாக்கி சுடுறாரே!..
ஆனால் விக்னேஷ் சிவனுடன் அவர் திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டு விடுவார் என நினைத்தனர். ஆனால் இனி தனி நாயகி படங்கள் செட்டாகாது. நடிகர்களின் படங்களை ஓகே செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம்.
அந்த ஐடியாவில் இருந்தவர் தான் ஜவான் படத்தில் நடிக்க ஓகே செய்தார். சமீபத்தில் வெளியான படமும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. வசூல் தற்போது வரை 600 கோடியை நெருங்கி இருக்கிறது. இதனால் பாலிவுட்டில் நயனுக்கு பட்டுக்கம்பளம் விரித்து இருக்கின்றனர்.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
தொடர்ச்சியாக அவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க நயன் பின்னாடி அலைந்து வருகின்றனர். இதனால் நேரம் என நினைத்த நயன் தொடர்ச்சியாக தன் சம்பளத்தினை உயர்த்தும் முடிவில் இருக்கிறாராம். இனி கொஞ்ச நாள் கோலிவுட்டிற்கு ப்ரேக் கொடுத்து பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ஐடியாவில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
வரும் செப்டம்பர் கடைசியில் நயன் தன்னுடைய ஸ்கின்கேர் நிறுவனத்தினையும் துவங்க இருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பையும் சமீபத்தில் தான் தன்னுடைய இன்ஸ்டாவில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விடாத மழையில் அம்மணி ஜாலி தான் போங்கோ!