அந்த படத்தில இருந்து அடிச்சி பண்ணதா இது?!. தக் லைப் வீடியோவை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்!...

Thug Life: மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். கமல், ஜனகராஜ், சரண்யா என பலரும் நடித்து வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். இந்த படம் வெளியாகி 36 வருடங்கள் ஆகியும் இருவரும் மீண்டும் இணையவே இல்லை. இருவரும் தனித்தனியே தங்களுக்கு பிடித்த திரைப்படங்களை செய்து கொண்டிருந்தனர். விக்ரமும், பொன்னியின் செல்வனும் திரைப்படம் […]

Update: 2023-11-06 21:17 GMT

Thug Life: மணிரத்னத்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் வருடம் வெளியான திரைப்படம் நாயகன். கமல், ஜனகராஜ், சரண்யா என பலரும் நடித்து வெளியான இந்த படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் இப்படத்தில் இடம் பெற்ற அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.

இந்த படம் வெளியாகி 36 வருடங்கள் ஆகியும் இருவரும் மீண்டும் இணையவே இல்லை. இருவரும் தனித்தனியே தங்களுக்கு பிடித்த திரைப்படங்களை செய்து கொண்டிருந்தனர். விக்ரமும், பொன்னியின் செல்வனும் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் மீண்டும் மணிரத்னம் - கமல்ஹாசன் இணையும் சூழ்நிலை ஏற்பட்டது. இது கமல்ஹாசனின் 234வது திரைப்படமாகும்.

இதையும் படிங்க: இது என்னடா டைட்டில்?!.. கேஜிஎப் ரேஞ்சிக்கு பில்டப்!.. எடுபடுமா கமல் 234?!.. டைட்டில் வீடியோ பாருங்க!..

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசனோடு திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் என பலரும் நடிக்கவுள்ளனர். ஒரு பக்கம் கமல்ஹாசன் ஹெச்.வினோத் இயக்கத்திலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கான வேலைகளும் ஒருபக்கம் நடந்து வருகிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் இன்று பிறந்தநாளை கொண்டாடவுள்ளதால் மணிரத்தினம் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியானது. இப்படத்திற்கு தக் லைப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சாக்கு போன்ற துணியில் தலை மற்றும் உடலை மூடிகொண்டு நிற்கும் கமல் ‘என் பெயர் சக்திவேல் நாயக்கர்.. என்னை கேங்ஸ்டர் என சொல்வார்கள்.. என வசனம் பேசி அவரை நோக்கி ஓடிவரும் சிலரை அடித்து துவம்சம் செய்வர்.

இதையும் படிங்க: KH234: நாயகன் இரண்டாம் பாகமா தக் லைஃப்? யாகுசாவாக மிரட்டும் கமலுக்கு அடுத்த மைல்கல்லா?..

இதையடுத்து கமல் மீண்டும் சாதிப்பெயரை சொல்கிறார்.. தேவர் மகனில் சாதி கூடாது என்று சொன்னவர் இப்போது இப்படி பேசுகிறர் என பலரும் அவரை வறுத்தெடுத்து வருகிறார்கள். ஒருபக்கம், இந்த வீடியோவில் வரும் காட்சிகள் 2019ம் வருடம் வெளிவந்த Rise of skywalker படத்தின் காட்சிகள் என சிலர் ஆதாரத்துடன் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கு பதில் கொடுக்கும் கமல் ரசிகர்கள் ‘அந்த படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு காட்சி பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்தால் உடனே அதை காப்பி என சொல்ல முடியாது. படம் வரட்டும். அப்போது பேசுவோம்’ என பதிவிட்டு வருகின்றனர். ஆனாலும், கமலை பிடிக்காதவர்கள் இதை கையிலெடுத்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கமல் ஐயா! இன்னும் என்னெல்லாம் கைவசம் வச்சிருக்கீங்க? அதிர வைத்த ‘இந்தியன் 2’

Tags:    

Similar News