இளையராஜா நல்லா இல்லனு சொன்னால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்… இது என்னப்பா புது உருட்டா இருக்கு!

Ilayaraja: தமிழ் சினிமாவின் இசை மேதையாக இருக்கும் இளையராஜா சொன்னால் அது அப்படியே மாறி நடக்குமாம். அதிலும் சூப்பராக பெயர் எடுக்குமா? அப்படி எந்த படத்துக்கு இது நடந்து இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளாமல் விடலாமா? அப்படி ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் ஒரு க்யூட் நட்பு இருப்பது பலரும் அறிந்த சேதி தான். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தவர் பாரதிராஜா. அந்த படத்தில் […]

By :  Akhilan
Update: 2023-09-15 01:51 GMT

Ilayaraja: தமிழ் சினிமாவின் இசை மேதையாக இருக்கும் இளையராஜா சொன்னால் அது அப்படியே மாறி நடக்குமாம். அதிலும் சூப்பராக பெயர் எடுக்குமா? அப்படி எந்த படத்துக்கு இது நடந்து இருக்கிறது எனத் தெரிந்து கொள்ளாமல் விடலாமா? அப்படி ஒரு சுவாரஸ்யமான தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் ஒரு க்யூட் நட்பு இருப்பது பலரும் அறிந்த சேதி தான். 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்தவர் பாரதிராஜா. அந்த படத்தில் இருந்து அவர் இயக்கும் அனைத்து படத்திற்கும் இசையமைப்பு செய்தவர் இளையராஜா.

இதையும் படிங்க: திருடுனேன் ஆனா திருடல… எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலில் காமெடி செய்த அட்லீ… இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!

இதில் பல படங்கள் மாஸ் ஹிட் அடித்தது. கமலின் சிகப்பு ரோஜாக்கள், ராதிகாவின் கிழக்கே போகும் ரயில் என பல படங்கள் இன்றைய அளவிலும் ரசிகர்களால் மறக்கவே முடியாததாக இருக்கிறது. இந்நிலையில் சில படங்களை பார்த்து விட்டு இளையராஜா நல்லாவே இல்லை எனச் சொன்னால் அந்த படம் ஹிட் அடிக்குமாம்.

அப்படி தான், சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான முதல் மரியாதை படம் இன்றளவில் பெருமையாக பேசபடுகிறது. ஆனால் இந்த படம் உருவான போது யாரும் வாங்கவே முன்வரவில்லையாம். சிவாஜியை நம்பி பாரதிராஜாவே ரிலீஸ் செய்து இருக்கிறார். ஆனால் அந்த படத்தினை பார்த்த இளையராஜா படம் நல்லா இல்லனு சொல்லிட்டாராம்.

இதையும் படிங்க: பொம்மையா நிக்குற காருக்கு அது எதுக்கு? கமல் படத்தில் நடந்த வில்லங்கமான சம்பவம் – இருந்தே ஒன்னும் போச்சா?

ஆனால் கூல்லாக இளையராஜா அப்பாடா நல்லா இருக்குனு சொல்லிடுவியோனு பயந்தேன். உனக்கு பிடிக்கலைல அப்போ படம் ஹிட்டு தான் என்றார். இதற்கு முன்னரும் அலைகள் ஓய்வதில்லை படத்தினை நல்லா இல்லைனு சொல்லி படம் ரிலீஸாகி மாஸ் ஹிட் படமானது குறிப்பிடத்தக்கது.

அதைப்போல, காதல் ஓவியம் படத்தினை பார்த்த இளையராஜா படம் பிச்சிக்கிட்டு ஓடும் எனக் கூறினார். ஆனால் ப்ளாப் ஆகி தியேட்டரை விட்டு ஓடியதாம். இது தெரியாம போச்சே. இனிமே எல்லா இயக்குனர்களும் இதை செய்யலாம் போல!

Tags:    

Similar News